இடுகைகள்

2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தெய்வம் விட்டுப் போவதில்லே

தர்மதுரை ஆணென்ன பெண்ணென்ன பாடலில் வரும் வரி இது: “தேடும் பணம் ஓடிவிடும் தெய்வம் விட்டுப் போவதில்லே”.  கேட்க நன்றாகவே இருந்தாலும், குறை காணா விட்டால் நமக்குத் தூக்கம் வருவதில்லை. ----- ஒருவர் தனக்குத் தெரிந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.  “கையில கிடைக்கிற பணத்தை எல்லாம் உடனே தங்கமா மாத்திருவேன் நான்.  கிராம் 240 ரூபாய் விக்கும் போது வாங்க ஆரம்பிச்சேன்.  அப்போவே அடேயப்பா இந்த விலையா தங்கம்னு மலைப்பா தான் இருந்துச்சு.  இப்ப விக்கிற விலையை அந்தக் காலம் யாரும் நெனச்சுக்கூட பாக்கலை.” அடுத்தவர் சொன்னார்.  “நான் நிலமாத்தான் வாங்கிப் போடுறது.  முதல் சேர்த்து வாங்குறது கொஞ்சம் கஷ்டம், ஆனா காலாகாலத்துக்கும் நம்ம பேர்ல இருக்கும்.  அழுகிப்போற சமாச்சாரமா...  தங்கம் கூட உங்களுக்கு நகையில போடப்போட மதிப்பு குறையும், ஆனா நிலம் எப்படிப் போனாலும் மதிப்பு ஏறிக்கிட்டேதான் போகுமே தவிர இறங்காது.” “நானும் கொஞ்சம் நிலம் வாங்குனேன், ஆனா தங்கம்னா வாங்குறதும் ஈஸி, சின்ன மதிப்புல கொஞ்சம் புரட்டுறதுக்கு எடுக்குறதும் ஈஸி.  பத்திரம், வில்லங்கம், அந்த மண்டையடியே வேண்டாம்னு ஒதுங்கிட்டேன்.” ----- இந்த ரெண்டு

தவறு

பூக்காத பூக்களுக்காக மன்னிப்புக் கேட்பதில்லை மரங்கள்.

அதிகாலை எண்ணங்கள்

வெற்றிடம் பற்றிப் படித்திருக்கிறீர்களா?  இங்க் ஃபில்லரால் மை ஊற்ற முடிவது வெற்றிடத்தால் தான்.  இங்க் ஃபில்லரை நாம் விரலால் அழுத்தும் போது அதன் உள்ளே உள்ள காற்று வெளியேறுகிறது.  நம் விரலை ஃபில்லரில் இருந்து எடுத்து அழுத்தத்தை நீக்கும் போது ஃபில்லருக்குள் காற்று கூட இல்லாத வெற்றிடம் உருவாகிறது.  வெற்றிடத்திற்கு ஒரு பண்பு உண்டு — அதன் அருகில் இருப்பது எதுவானாலும் விசையுடன் தன்னோடு ஈர்த்துக்கொள்ளும்.  இங்க் ஃபில்லரின் துவாரம் மைக்குள் மூழ்கி இருப்பதால் ஃபில்லர் மையை தன்னுள் இழுக்கிறது.  இது தான் புட்டிக்குள் இருக்கும் மை ஃபில்லருக்குள் ஏறக் காரணம்.  இதே அடிப்படையில் தான் அடி பம்பு, தண்ணீர் மோட்டார் எல்லாமே இயங்குகிறது. ========== ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?  உங்கள் மனதில் என்னென்ன எண்ணங்கள் தோன்றுகின்றன?   ஒவ்வொரு விழிப்பும் ஒவ்வொரு பிறப்பு என்று வைரமுத்து எழுதியிருக்கிறார்... அது உண்மைதான்.  காலையில் எழுந்ததும் சில கணங்கள் உங்கள் மனதில் எண்ணங்கள் ஏதும் தீவிரமாக இருப்பதில்லை.  முந்தைய தினம் நடந்த சம்பவங்கள், இன்று செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்

ஏணி

உண்மை என்னும் உயரம் ஏறப் பொய்யே ஏணி.

தலைகீழ் ராட்டினம்

படம்
நேற்று முன்தினம் மதியம் முழுவதும் சிட்னியில் இருக்கும் லூனா பார்க்கில் வெட்டியாய்ச் சுற்றித் திரிந்தோம்.  கம்பெனியில் இருந்து இலவசமாகக் கூட்டிச் சென்றிருந்தார்கள்.  பல விதமான ராட்டினங்கள்... நன்றாகத்தான் இருந்தது.  அதில் என்னை ரொம்ப ஆச்சர்யப்பட வைத்தது கீழிணைக்கப்பட்டிருக்கும் இந்த ராட்டினம் தான். உள்ளே உட்கார்ந்த நிலையில் நாம் இருக்கையில் ராட்டினம் நம்மை 360° சுற்றுகிறது. சும்மா நேரே உட்கார்ந்திருக்கும்போது நாம் எங்கிருக்கிறோம், தரை எங்கிருக்கிறது என்று தெரிகிறது.  கீழிருந்து மேலே ஏறும்போதும் மேலிருந்து கீழே இறங்கும்போதும் நாம் எங்கிருக்கிறோம், தரை எங்கிருக்கிறது என்று தெரிகிறது.  அதே போல் நாம் மேலே போய்க் கொண்டிருக்கிறோமா அல்லது கீழே இறங்கிக் கொண்டிருக்கிறோமா என்பதும் தெளிவாகத் தெரிகிறது.  ஆனால் எந்த நேரத்தில் நாம் உச்சியில் ஏறி பின் கீழிறங்கத் தொடங்குகிறோம் என்பது தெரியவே இல்லை.  ஏழெட்டு தடவை முயன்று பார்த்தேன், ஆனால் தெரியவேயில்லை. ராட்டினம் சுற்றுவதை தள்ளி நின்று முதலில் பார்க்காமல் ஏறி உட்காரும் ஒருவரால் ராட்டினம் என்ன செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது என்று நின

பிறை 'கூட'வா??

பெண்ணோடு காதல் வந்தால் பிறைகூடப் பேரழகு என்னோடு நீ இருந்தால் இருள்கூட ஓரழகு இந்த இரண்டு வரிகளும் பல வருடங்களுக்கு முன் முதன்முதலில் கேட்டதிலிருந்து இன்று வரையிலும் கேட்கும்போதெல்லாம் உறுத்திக் கொண்டே இருக்கின்றன.  என்னத்தை நினைத்து வைரமுத்து இந்த வரிகளை எழுதினாரோ.  பிறையும் இருளும் எல்லா நேரத்திலுமே அழகுதானே.

யாமறிந்த மொழிகளிலே

படம்
பல தமிழர்கள் இதைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன் -- "தமிழ் என்பதே ஒரு அருமையான அனுபவம்".  சிறு வயதுகளில் அதற்கெல்லாம் நான் மதிப்பே கொடுத்ததில்லை.  என் ரத்தத்தின் ரத்தமே என்று மேடையில் முழங்கும் அரசியலுக்கும் "தமிழே அமுதே"வுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் அப்போது எனக்குத் தெரியவில்லை.  தமிழ் மட்டுமே தெரிந்திருந்த அந்தக் காலத்தில் ஒப்பு நோக்க வேறெந்த மொழியும் இல்லை என்பதும் ஒரு காரணம். இப்போது நிலைமை வேறு.  பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் சிந்திக்கிறேன்.  ஆங்கிலப் பாடல்கள் கூட புரியத் தொடங்கி விட்டது.  ஆங்கிலத்தில் வாசிப்பதும் எழுதுவதும் தமிழை விடப் பலமடங்கு அதிகம்.  இந்த நிலையில் என்னால் ஆங்கிலமும் தமிழும் எனக்கு அளிக்கும் அந்தரங்க அனுபவத்தைப் பற்றி ஓரளவு பேச முடியும். ஜெயமோகனின் புல்வெளி தேசம் புத்தகத்தை நேற்று படித்து முடித்து, நேற்றிரவே கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் நாவலை வாசிக்கத் தொடங்கி விட்டேன்.  தமிழ் வாசிக்கும் போது தோன்றும் அந்த எண்ணம் மீண்டும் இன்று காலையில் தோன்றியது: தமிழ் அந்தரங்கமாக என் மனதில் ஒரு இனிய பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது.  அ

வேதம் புதிது

திடீர் திடீரென்று எனக்குத் தோன்றும், ஏற்கெனவே பார்த்த ஏதாவதொரு படத்தைத் திரும்பவும் பார்க்க வேண்டுமென்று.  பல வருடங்களுக்கு முன் பார்த்த படம் வேதம் புதிது .  இன்றைக்கு மீண்டும் பார்க்கத் தோன்றியது. முதல் தடவை இந்தப் படத்தைப் பார்த்த பின்புதான் பாரதிராஜா மேல் எனக்கு ஒரு தனி மரியாதை வந்தது.  பிறகு இந்தப் படத்தை முழுவதுமாக மறந்து போய் விட்டேன்.  இன்று ஒவ்வொரு காட்சியையும் பார்க்கப் பார்க்க அதிலிருந்த நேர்த்தியும் அழகும் மீண்டும் ஒரு புதிய அனுபவமாயிருந்தது. வழக்கமான தமிழ்ப்படங்களைப்போல வளவளவென்றில்லாமல் சொல்ல வேண்டிய விஷயத்தை மட்டும் சொல்லி வேகமாக நகர்ந்த வண்ணமிருக்கிறது படம்.  இயல்பான பாத்திரங்களின் இயல்பாகவும் 'நச்'சென்றும் இருக்கும் வசனங்களை ரொம்ப ரசித்தேன்.  முக்கியமாக வீட்டுக்குப் புதிதாக வந்திருக்கும் பிராமணப் பையனால் பாலுத்தேவரின் வீட்டில் ஏற்படும் மாற்றங்கள். - நீங்க கோழியெல்லாம் சாப்பிடுவேளா? - ஆங், ஆடு கோழி எல்லாத்தையும் திங்கிறது தான். - மாமி? - அவ மட்டும் என்ன வாயைப் பாத்துட்டா இருப்பா, அவளும் திங்கிறதுதான். - இதெல்லாம் பாவம் இல்லையா? - (தனக்குள்) சின்னப் பச

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: ஊஞ்சல்

இன்றைய வார்த்தை ஊஞ்சல் = swing இத்துடன் எனது 30 நாள் சவால் நிறைவு பெறுகிறது. மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: அறிக்கை

இன்றைய வார்த்தை அறிக்கை = manifesto மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: கால் விரல்

இன்றைய வார்த்தை கால் விரல் = toe finger என்பது கை விரலை மட்டுமே குறிக்கும். மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: துரோகம்

இன்றைய வார்த்தை துரோகம் = betrayal மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: சல்லடை

இன்றைய வார்த்தை சல்லடை = sieve சல்லடையில் சலிப்பதை sifting என்று சொல்லுவர். மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: நொண்டுதல்

இன்றைய வார்த்தை (காலில் காயம் பட்டதால்) நொண்டுதல் = limping மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: கெஞ்சு

இன்றைய வார்த்தை கெஞ்சு = implore மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: சொறி நாய்

இன்றைய வார்த்தை சொறி நாய் = mangy dog mange என்றால் சொறி.  mangy என்றால் சொறி பிடித்த என்று அர்த்தம் வரும்.  சொறி நாய் என்பதையே மோனையோடு சொல்ல வேண்டுமென்றால் mangy mutt என்று சொல்லலாம். மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: குத்துக்காலிடு

இன்றைய வார்த்தை குத்துக்காலிடு = squat மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: சறுக்கல்

இன்றைய வார்த்தை சறுக்கல் = slide (சறுக்கி விளையாடுவோமே, அந்த சறுக்கல்.) மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: ஏற்றம்

இன்றைய வார்த்தை ஏற்றம் = ascent மேடு ஏறுது-னு சொல்லுவோமே, அந்த ஏற்றம். மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: அலி

இன்றைய வார்த்தை அலி = eunuch மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: விக்கல்

இன்றைய வார்த்தை விக்கல் = hiccup மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: கேலி

இன்றைய வார்த்தை கேலி = ridicule மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: சகுனம்

இன்றைய வார்த்தை சகுனம் = omen மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: கூன் முதுகு

இன்றைய வார்த்தை கூன் முதுகு = hunchback இந்த வார்த்தைக்கே கூனன் (அல்லது கூனி) என்றும் பொருள். மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: சிலேடை

இன்றைய வார்த்தை சிலேடை = pun மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: பேன்

இன்றைய வார்த்தை பேன் = head lice மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: கடைவாய்ப்பல்

இன்றைய வார்த்தை கடைவாய்ப்பல் = wisdom tooth மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: கலப்பை

இன்றைய வார்த்தை கலப்பை = plough உழுவதற்கும் plough தான், ஆனால் வினைச்சொல்லாக ploughing என்பது போலப் பயன்படுத்த வேண்டும். மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: கவட்டை

இன்றைய வார்த்தை கவட்டை = catapult மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: ஆள் மாறாட்டம்

இன்றைய வார்த்தை ஆள் மாறாட்டம் = impersonation மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: வாசல்படி

இன்றைய வார்த்தை வாசல்படி = threshold மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: பீத்தல்

இன்றைய வார்த்தை பீத்தல் = boasting, bragging (ரொம்பத்தான் பீத்தாத-னு சொல்லுவோமே, அது.) மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: இன்றியமையாத

இன்றைய வார்த்தை இன்றியமையாத = essential மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: சுருக்குக் கயிறு

இன்றைய வார்த்தை சுருக்குக் கயிறு = lasso தூக்குக் கயிறு = noose மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: உளி

இன்றைய வார்த்தை உளி = chisel மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: புளித்தல்

இன்றைய வார்த்தை (மாவு/உணவு) புளித்தல் = fermentation புளிப்புச் சுவையை sour என்று அழைப்பர். மேலும் சில வார்த்தைகள்

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: வைக்கோல் போர்

இன்றைய வார்த்தை வைக்கோல் போர் = haystack மேலும் சில வார்த்தைகள்

30 நாள் சவால்: தினம் ஒரு ஆங்கில வார்த்தை

Matt Cutts 30 நாள் சவால் என்னும் பெயரில் ஏதேனும் ஒன்றை ஒரு மாதம் முயன்று பார்க்கிறார்.  இந்த வீடியோவில் இதைப் பற்றி அவர் பேசுகிறார்.  என்னுடைய 30 நாள் சவால், ஒவ்வொரு நாளும் ஒரு தமிழ் வார்த்தைக்கு ஒப்பான ஆங்கில வார்த்தையை இங்கே பதிவு செய்வது. இன்றைய வார்த்தை: ஆப்பு = wedge

நந்தலாலா

இதைவிடக் கேவலமா ஒரு படத்தை மிஷ்கின் எடுக்க முடியுமாங்கிறது கொஞ்சம் சந்தேகம் தான்.

வண்டித்தடம்

பள்ளிக்கூட நாள்களில் முழங்கால் போடுவது ஒரு பொதுவான தண்டனை.  மணல் தரையில் கூட முழங்கால் போடச் சொல்வார்கள்.  மைதானத்தில் வகுப்பு இருந்தால் மைதானத்து மணல் தரையில்தானே முழங்கால் போட முடியும்!  வகுப்பில் என்னால் பேசாமல் இருக்க முடியாது.  அதனால் பலமுறை தண்டிக்கப் பட்டிருக்கிறேன்.  தாமதமாக வருவது, வீட்டுப் பாடம் முடிக்காதது என்று பல விதங்களிலும் தண்டனை பெற்றிருப்பதால் முழங்கால் போடுவதெல்லாம் அப்போது எனக்கு ரொம்ப சாதாரணம். முழங்கால் போட எப்போதும் துணை இருக்கும்.  எந்தத் தவறாயினும் நம்முடன் சேர்ந்து ஒரு ஐந்தாறு பேரும் செய்திருப்பார்கள்.  "எப்பா... காலு வலிக்கி(து)" என்று பையன்கள் இடையிடையே உட்கார்வதோ நிற்பதோ உண்டு.  அப்போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும், உண்மையிலேயே இவர்களுக்குக் கால் வலிக்கிறதா இல்லை சும்மா அப்படிச் செய்கிறார்களா என்று.  நேர்மையாக இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் எனக்கு அப்போதே இருந்தது.  அதனால் தண்டனையில் ஏமாற்றுவது எனக்குப் பிடிக்காது.  எனக்குக் கால் வலித்ததும் இல்லை. சில வருடங்களுக்கு முன் கால் உடைந்து சரியாகிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு நாள் டாக்டர் சொன

அருணாச்சலம் பாடல்கள்

படம்
பல வருடங்களுக்குப் பிறகு அருணாச்சலம் படப் பாடல்களை இன்று கேட்டேன்.  ரொம்ப ஆர்வமாக எதிர்பார்த்தது "சிங்கம் ஒன்று புறப்பட்டதே".  மலேசியா வாசுதேவன் பாடத் தொடங்கியதும் வில்லுப்பாட்டு தெருக்கூத்து மாதிரி ஒரு பின்னணி இசை தொடங்கி என்னை ரசிக்கவே விடாமல் பண்ணி விட்டது.  கம்பீரமான பாடலாக இருக்க வேண்டியது காமெடிப் பாடல் மாதிரி ஆகிவிட்டது.  (கலர் கனவுகள் படத்தில் வரும் "சப்பா சப்பா" பாட்டில் வரும் இசை தான் ஞாபகத்திற்கு வந்தது.) அடுத்தது "அதான்டா இதான்டா". ஏகப்பட்ட தடவை கேட்ட பாடல்தான்.  ஆனால் இன்று தான் ஒரு விஷயத்தை கவனித்தேன்.  எஸ் பி பாலசுப்பிரமணியம், அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தை மனதில் வைத்துப் பாடியிருக்கிறார்.  "என் கண்ணிரண்டைக் காப்பாற்றும் கண்ணிமையும் நீதான், என் தோள்களிலே முழுபலமாய் இருப்பவனும் நீதான்" என்பது போன்ற வரிகளில் அந்தத் "தானை" அழுத்தி உச்சரிக்காமல் சாதாரணமாகப் பேசுவது போல் பாடியிருக்கிறார்.  அழுத்தி உச்சரித்தால் அது மேடையில் சொற்பொழிவு ஆற்றுவது போல் ஆகியிருக்கும். ஒரு டிவி நிகழ்ச்சி ஒன்றில் எஸ்பிபி இளம் பாடக

நெற்றிக்கண்

விசு படங்கள் எனக்குப் பிடிக்கும்.  அதிலும் குறிப்பாக எஸ்வி சேகர், கிஷ்மு எல்லாம் இருந்து விட்டால் சொல்லவே வேண்டாம்.  விசு படத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள் தங்கள் தரப்பு நியாயங்களை எப்போதுமே அதிரடியாகத் தான் சொல்வார்கள்.  அதிகமான நாடகத்தன்மை இருக்கும் -- அந்த நாடகத் தன்மைக்காகவே அந்தப் படங்களை நான் ரசித்திருக்கிறேன்.*  பிடிக்கும் என்றாலும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி வாழ்க்கையைப் பற்றி அவர் படங்கள் என்னை பாதித்ததில்லை. நெற்றிக்கண் .  பார்க்க ஆரம்பிக்கையில் பாலச்சந்தர் படம் என்று தான் நினைத்தேன்.  (பட ஆரம்பத்தில் யார் பெயரையும் கவனிக்கவில்லை.)  பாலச்சந்தர் படம் மாதிரி இல்லாததால் கொஞ்சம் ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.  பாலச்சந்தருடைய பாணி இதுவல்ல.  விசுவைப் போல "குற்றம் புரிந்தவனுக்குத் தண்டனை" என்ற மேம்போக்கான நியாயம் பேசும் படங்கள் பாலச்சந்தருடையவை அல்ல.  பாலச்சந்தர் படங்களில் "கெட்டவர்கள்" யாரும் கிடையாது.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம், அந்த நியாயங்களைச் சுற்றி நகரும் கதையில் நல்லவரோ கெட்டவரோ இருப்பதில்லை. நெற்றிக்கண் படம் முடிந்த பின் சக்கரவர்த

காலநேரம்

"பணம் என்பது மனிதர்களுடைய வாழ்வை எளிமையாக்கும் நோக்கத்தோடு கண்டுபிடிக்கப் பட்ட சாதனம், ஆனால் அது எல்லோருடைய வாழ்க்கையிலும் கஷ்டத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறது" என்று வினோபா பாவே சொன்னதாகப் படித்திருக்கிறேன்.  கடிகாரங்களும் நாட்காட்டிகளும் அதே கணக்கில் தான் சேரும் என்று தோன்றுகிறது.  "நேரம்" என்பதற்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து நம்மை நாமே கஷ்டப்படுத்திக் கொள்கிறோமோ?

தவம்

பருவம் முழுவதும் வயலில் உழைத்தேன். அறுவடை முடிந்ததும் கடவுள் சொன்னார் "அப்படியே ஆகட்டும்".

ஜெயகாந்தன்: என்னைப் பிரமிக்க வைக்கும் தத்துவவாதி

ஆதி இந்து மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் ஒருவர்.  காளி கசாப்புக் கடை வைத்திருக்கும் குடும்பத்திலிருந்து வந்து குலத் தொழிலையே செய்து வருபவர். ஆதியின் நட்பாலும், அவரது ஆஸ்ரமத்தின் வாழ்க்கையைப் பற்றி அறிய நேர்ந்த அனுபவத்தாலும் காளிக்கு தனது 'கொலைத் தொழிலைப் பற்றி' ஒருவகைக் குற்ற உணர்வு மனத்துள் வளர்ந்ததுதான் கண்ட பலன். அதற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள காளி முயன்ற போது, அவன் நம்பிய இந்துமதப் பெரியவர்கள் எல்லாம் ஒரே குரலில் ஜீவகாருண்யத்தைப் பற்றியே அதிகம் பேசினார்கள்!  'தான் ஒருவன் ஜீவகாருண்யவாதியாய் ஆகிவிடுவதால் இந்த விலங்குக்கு என்ன காருண்யம் நேர்ந்துவிடப் போகிறது...?  ஒரு பாவத்திலிருந்து தனியொரு மனிதன் தப்பித்துக் கொள்வதா பிரச்சனை?  அந்தப் பாவமே முற்றாகத் தவிர்க்கப் படுவதற்கு என்ன வழி?  அப்படி தவிர்க்கவொண்ணாத ஒரு செயல் -- ஒரு தொழில் -- ஒரு வாழ்க்கை முறை எப்படி ஒரு பாவமாகும்?  உலகிலுள்ள மனிதர்கள் எல்லோரும் தாவர உணவையே உட்கொள்வது என்று தீர்மானித்து விட்டால், மனித வாழ்க்கை இன்னும் பல நெருக்கடியான பிரச்சனைகளில் சிக்கி அல்லலுறும்.  உலகம் முழுவதற்கும் ஒவ்வாத ஒரு நடைமுறை -- எல்லா ம

அச்சம் தவிர்

படம்
அஞ்சாதே படத்தின் அச்சம் தவிர் பாடலை சில நாட்களுக்கு முன் தற்செயலாகக் கேட்கும்போது தான் கவனித்தேன்.   புதிய ஆத்திசூடியில்  மீண்டும் மீண்டும் பாரதியார் வலியுறுத்துவது பயப்படாமல் இருக்க வேண்டுமென்பதைத் தான்.  கீழ்க்கண்ட அத்தனையும் நேரடியாக பயத்தை விடச்சொல்லும் வரிகள்: அச்சம் தவிர் கீழோர்க்கு அஞ்சேல் கேட்டிலும் துணிந்து நில் சாவதற்கு அஞ்சேல் செய்வது துணிந்து செய் தீயோர்க்கு அஞ்சேல் தொன்மைக்கு அஞ்சேல் தோல்வியில் கலங்கேல் பேய்களுக்கு அஞ்சேல் கொஞ்ச நாள்களுக்கு முன் என் பயத்தை நானே நேரடியாகப் பார்க்க நேரிட்டது.  சின்னச் சின்ன விஷயங்களில் கூட பயப்படுவதையும் அதனால் வாழ்க்கையில் தோன்றும் மாறுதல்களையும் பார்க்க பிரமிப்பாக இருந்தது.  பயம் புற்றுநோய் போலப் பரவி நம் வாழ்க்கையையே அழித்துவிட வல்லது.  அதனால் தானோ என்னவோ பாரதியும் பயத்தை உதறுமாறு பல கவிதைகளில் அறிவுறுத்துகிறார்.  (அச்சமில்லை பாட்டை அறியாதவர் உள்ளனரா என்ன!) மேலுள்ள வரிகள் தவிர்த்து, புதிய ஆத்திசூடியில் என்னைக் கவர்ந்த வரிகள் இவை: கற்றது ஒழுகு காலம் அழியேல் தன்மை இழவேல் தாழ்ந்து நடவேல் துன்பம் மறந்திரு தூற்றுதல் ஒழி தவத

சோடியமுகம்

காலப்பயணம் முடித்து இப்போது தான் திரும்பினேன். அணுக்களைப் பார்த்தே தீர வேண்டுமென்ற ஆசை தான். சோடியம் தான் கிடைத்தது. பார்த்தேன், பல நூறு சோடியத்தை. எல்லாமே 11 எலெக்ட்ரான் தான். ஆயினும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முகம். சாப்பிட அமர்ந்தேன். அத்தனை முகமும் சிரித்தது ஒரு சோற்றுப் பருக்கையிலிருந்து.

தாத்தா

சின்னப் பையனாய் இருக்கும் போது என் கண்ணில் எப்போதுமே முதலாகப் பட்டது என் தாத்தாவுக்கு என்னை விட என் அண்ணன் மேல் பிரியம் அதிகம் என்பதுதான்.  அவருக்குப் புத்தகங்கள் என்றால் பிடிக்கும்.  பாட்டு, நாடகங்களும் கூட.  அவருக்குக் கதைகள் படித்துக் காட்ட வேண்டியது என்னுடைய ஒரு வேலை. நேற்று வாசித்த ஜெயமோகனுடைய அறம் கதையில் வரும் "லச்சுமி வருவா போவா… சரஸ்வதி ஏழு சென்மம் பாத்துத்தான் கண்ணுபாப்பான்னு சொல்லுவாங்க" என்ற வரி மனதில் நின்று யோசிக்க வைத்துக்கொண்டே இருந்தது.  என் தாத்தா பல புத்தகங்கள் வைத்திருந்தார்.  பலவற்றை வீட்டில் யாரும் படிப்பதேயில்லை.  நான் படிக்க முயன்ற சில புத்தகங்கள் எனக்கு சுவாரசியமாய் இல்லை என்பதை விட எனக்குப் புரியவில்லை என்பதே சரியாக இருக்கும்.  என் அப்பாவுக்கு படிப்பதில் ஆர்வம் கொஞ்சம் உண்டு என்றாலும் என் தாத்தாவைப் போல் புத்தகங்கள் எதுவும் அவர் சேர்த்து வைக்கவில்லை. எனக்கு 18 வயது இருக்கும் போது என் தாத்தா இறந்தார்.  அந்த சமயத்தில் அவருக்கு வயதாகி உடல் நலமும் சரியில்லாமல் இருந்ததால் முன்பு மாதிரி அவரிடம் என்னால் நெருக்கமாய் இருக்க முடியவில்லை.  அவரைத் தவிர்த்தே

அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்

இரண்டு வாரங்களுக்கு முன் சிட்னியில் டார்லிங் ஹார்பரில் வெட்டியாய் உட்கார்ந்திருந்தேன்.  சுற்றுலாப் பயணிகள் நிறைந்த அந்த இடத்தில் வெறுமனே உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது ஒரு விதமான அனுபவம்.  அப்போது ஒரு பறவை எங்கிருந்தோ பறந்து வந்து எனக்கு அருகில், கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் தூரத்தில் அமர்ந்தது.  ஆள் நடமாட்டம் கொஞ்சம் கம்மியாய் இருந்த அந்த இடத்தில் அது ஓய்வெடுக்கத் தொடங்கி விட்டது.  அவ்வப்போது யாரேனும் அருகில் வந்தால் மட்டும் விலகி நகர்ந்து கொண்டது. அப்படி நகரும்போது தான் கவனித்தேன் அந்தப் பறவையின் கால்கள் பெரிதாக சேதமடைந்திருப்பதை.  நடப்பதே கொஞ்சம் கஷ்டப்பட்டுத் தான் நடந்தது.  ஒரு ஊனமுற்ற பறவையை நான் பார்ப்பது இது முதல் தடவையல்ல .  ஒவ்வொரு முறையும் என் மனதில் தோன்றுவது இது தான்.  அந்த ஊனத்தை "ஐந்தறிவு" ஜீவிகள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.  ஊனமேதும் இல்லாத மற்ற பறவைகளின் அதே வாழ்க்கையைத் தான் ஊனமுற்ற இந்தப் பறவைகளும் வாழ்கின்றன.  ஆனால் ஊனமுற்ற மனிதன் என்றால் மட்டும் நாம் எத்தனையோ விதமான வேறுபாடு காட்டுகிறோம்.  நாம் காட்டும் வேறுபாட்டால் பலர் தங்களைத் தாங்களே இரண்டாம