இடுகைகள்

2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுக துக்கே, சமே

கீர்த்திவாசனின் இந்தப்பதிவுக்கு இது பதில். முதலில் அதைப் படிச்சிருங்க. டாக்டர் ஊசி போடுகிறார். பயங்கரமாய் வலிக்கிறது. ஒரு வயதுக் குழந்தை என்ன செய்யும்? அழும். அழுவது துன்பத்திலிருந்து தப்பிக்க ஏற்கெனவே குழந்தைக்கு உதவியிருப்பதால், இந்த வலியிலிருந்து தப்பவும் குழந்தை அழுகிறது. நமக்கு ஊசி போடுகையில் நாம் என்ன செய்வோம்? இந்த வலி நிரந்தரமல்ல என்று நமக்குத் தெரியும். "ரொம்ப வலிக்குதாங்க?" என்று மனைவி கேட்டால் "ஆம்" என்றுதான் சொல்வோம். நமக்கும் தெரியும், மனைவிக்கும் தெரியும், டாக்டருக்கும் தெரியும், சில நிமிடங்களில் வலி மறைந்துவிடும் என்று. இந்த அணுகுமுறை பொருந்தும் என்று நினைக்கிறேன். "துன்பம் நேர்கையில் துன்பப்படலாம், புலம்பலாம், பிதற்றலாம், அழலாம். ஆனால் அந்தத் துன்பம் (மற்ற இன்பத்தைப் போலவே) நிரந்தரம் அல்ல என்பதையும் நினைவில் வையுங்கள்" என்று பரமாத்மா சொல்லியிருக்கலாம். "நல்ல விஷயத்துக்காக அனுபவிக்கிற தற்காலிகத் துன்பம்" பற்றி நான் சொல்வதாகத் தவறாக நினைக்க வேண்டாம். நான் சொல்வதற்கும் நல்லது-கெட்டதுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு திருட

எங்கே பிராமணன்

இந்தக் கதையைப் படித்ததும் மனதில் என்னவோ தோன்றியது -- எங்கேயோ கேட்ட குரல் மாதிரி ஒரு உணர்வு. முதல் இரண்டு முறை படித்தும் ஏனென்று புரியவில்லை. இரண்டு மணிநேரம் கழித்து மீண்டும் படித்தபோது தான் என்னவென்று புரிந்தது. *ஓரளவுக்கு* இந்தக் கதையையொட்டிய சம்பவம் என் வாழ்விலும் நடந்தது என்பதுதான் அது. கிட்டத்தட்ட எல்லாரையும் போலவே நானும் காதலித்தேன். கிட்டத்தட்ட எல்லாரையும் போலவே என் காதலும் நிராகரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட எல்லாரையும் போலவே நானும் ரொம்ப அலட்டிக்கொள்ளவில்லை (இப்படிச் சொன்னால் அது உண்மையாய்த்தான் இருக்குமா என்று தெரியவில்லை) . அந்தப்பெண் எனக்கு ஒரு நல்ல தோழி. அவ்வப்போது அவளுக்கு நான் சில உதவிகள் செய்வதுண்டு. என்னை எதுவோ வாங்கிவரச் சொன்னவள், என்னிடம் ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தாள். "காதலி" கையால் கொடுத்த நூறு ரூபாய்க்கு பல கோடி மதிப்பல்லவா? நானும் பொக்கிஷமாய் அதை வைத்திருந்தேன். அந்தப் பணம் என்னிடம் வந்த முதல் வாரம், மூன்று முறை அதை எடுத்து எடுத்துப் பார்த்தேன். அடுத்த வாரம் ஒரே ஒருமுறை தான் பார்த்தேன். அப்புறம் அதை எப்போதாவது நினைத்துக் கொள்வதுண்டு. எட

குருதிப்புனல் -- விக்ரம் டப்பிங் பேசினாரா?

குருதிப்புனல் படத்தில் தீவிரவாதி நரசிம்மனுக்கு (நம்பர் 2 ஆள் -- பத்ரி இல்லாத நேரத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவன்) டப்பிங் பேசியது (நடிகர்) விக்ரமா? தெரிந்தால் சொல்லுங்கள்.

அவ்வளவுதானா?

பிரியும்போதுதான் தெரிகிறது - நிரந்தரமென்று நம்பிவிட்டதும், வெறுப்பதும் ஒருவகை உறவுதானென்பதும்.

கற்றது தமிழ்

கற்றது தமிழ் படம் பார்த்தேன். படத்தைப் பற்றி விமர்சனம் எழுதவோ அல்லது படத்தைப் பற்றிக் கருத்து சொல்லவோ இப்போது மனமில்லை. அந்தப் படத்தில் எனக்குப் பிடித்த காட்சிகள், பாடல் வரிகளை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. உங்களுக்குப் பிடித்த காட்சிகள், வரிகளையும் சொல்லுங்களேன்! வசனங்கள்/காட்சிகள்: 0:05:14 என் கூட படிச்ச முப்பது பேர்ல மூனு பேருக்கு மைனாரிட்டி-னு வேலை கிடைச்சது. 0:26:15 கடைசி குச்சி. வேற பெட்டி தேட முடியாது. 0:26:26 புத்தி இருக்கிறவன்தான் புகைவிட முடியும் 0:28:37 நிஜமாத்தான் சொல்றியா? 0:30:33 புரியலை? / ஆமா சார். / உங்களுக்குப் புரியலைன்னா என்ன சார்? / அப்புறம் ஏன்டா கேட்ட? 0:36:17 நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க 0:38:18 சார் / என்னடே? / பால் சார். / அதுக்கென்னடே? / தேங்க்ஸ் சார். / நோ மென்ஷன் டே 0:45:06 இப்போ வரைக்கும் சாவுதான் என் விசிட்டிங் கார்ட் 0:59:36 அதெல்லாம் கிடைக்கும்... ஒரு டம்ளர் சுடுதண்ணி கிடைக்குமா? 1:15:31 அநேகமா அவருக்குப் போன ஜென்மம்னு ஒன்னு இருந்திருந்தா டூரிஸ்ட் கைடா தான் இருந்திருப்பாரு. என்ன நான் சொல்றது... 1:32:25 நான் உன் ஃபிரண்டு இ
கதாபாத்திரத்தின் தோற்ற காதல், விடுமுறை முடிந்து ரயிலில் தனிமை, தூக்கம் பிடிக்காத நள்ளிரவுப் படுக்கை. இன்னுமா உன்னைக் காதலிக்கிறேன்?

உளகமே சுழலுதே

வழக்கம்போலவே நல்ல விஷயம் எதையும் சொல்லாமல் குறைசொல்வதற்காகவே இந்தப் பதிவு :-). வெயில் படத்தின் பாடல்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன். மீண்டும் மீண்டும் கேட்கையில் சிலநேரங்களில் ஷ்ரேயா கோஷலின் ' உளகமே சுழலுதே 'வும் ஜாஸி கிஃப்ட்டின் ' வெயிலோடு மள்ளுக்கட்டி 'யும் நிஜமாகவே எரிச்சலைக் கிளப்புகின்றன. G.V. பிரகாஷ் : உங்க பாட்டு ரொம்ப நல்லா இருக்கு. தமிழ் உச்சரிப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் என்னைப்போன்றவர்கள் சந்தோஷப்படுவோம்.

ஆயிரங்காலப்பயிர்

எப்போது தூங்கினேன்? ஆற்றாமை அருவெருத்த முத்தம் வெட்கம் தராத நிர்வாணம் உள்ளம் ஒட்டாத கலவி இருளில் நனைந்த தலையணை மறுநாள் அம்மா இட்ட திருநீறு முதலிரவு முடிந்தது, வாழ்க்கை தொடர்கிறது.

சாதிகள் இருந்ததடி பாப்பா

நான் 9-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் ஒருநாள் என்னுடைய தமிழ் வாத்தியார் என்னுடைய தாத்தா பெயரைக் கேட்டார். (என் தாத்தா பெயரை அவர் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அவர் ஒரு அரைவேக்காடு என்பதால் இதையெல்லாம் கேட்பது வழக்கம் தான்.) எப்போதும் என் தாத்தா தன் பெயரைச் சொல்வதுபோல் நானும் "மாடசாமி நாடார்" என்றேன். உடனே சுதாரித்துக் கொண்டு "மாடசாமி" என்று மீண்டும் சொன்னேன். ஏனென்றால் எனக்கு சின்ன வயதிலேயே சொல்லிக் கொடுக்கப் பட்டது, "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று. என் நண்பர்கள் பலரையும் போல நானும் ஐாதியைப் பற்றிப் பேசுவதில்லை என்று தீர்மானமாக இருந்த காலம் அது. ஆகவேதான், உடனே அவசரப்பட்டு என் தாத்தாவின் பெயரிலிருந்து ஐாதியை நீக்கிச் சொன்னேென். இது நடந்து ஏறத்தாழ பத்தாண்டுகள் கழித்து இப்போது ஐாதி விஷயத்தில் என் கருத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. என் தாத்தா வாழ்ந்த காலத்தின்படி பார்க்கையில் அவரது முழுப்பெயர் என்பதே அவரது ஐாதியின் பெயரும் சேர்ந்ததுதான். எனக்குத் தெரிந்த வரையில் அவர் தன் பெயரை ஐாதியைச் சேர்க்காமல் சொல்லிக்கொண்டதே இல்லை. "ஐாதி வேண்