இடுகைகள்

செப்டம்பர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அப்பா சீரியஸ், உடனே வரவும்

முகவரி மாறி என்னிடம் வந்த கடிதம் இன்னமும் என் அலமாரியில்தான் இருக்கிறது. அதைப் பார்க்கையில் மட்டும் யோசிக்கிறேன் -- மகனைப் பார்க்காமலே போய்ச் சேர்ந்திருப்பாரோ?

மறு ஒலிபரப்பு: புது வலைப்பதிவு

அறிவிப்பு: நான் ரசித்த மற்றவர்களின் படைப்பு -- பெரும்பாலும் ஓரிரு வரிகளை மட்டும் -- பதிப்பிப்பதற்காக மறு ஒலிபரப்பு என்னும் புதிய வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன்.

யாதும் ஊரே

பதினொன்றாம் வகுப்பில் என்று நினைக்கிறேன்.  "யாதும் ஊரே" புறநானூற்றுப் பாடல் மனப்பாடச் செய்யுளாக இருந்தது.  முதல் இரண்டு வரிகளைத் தவிர மற்ற எதையும் வாசிக்கக்கூட முடியவில்லை -- கேள்விப் பட்டிராத வார்த்தைகள் அதுவரை பார்த்திராத முறையில் கோர்க்கப்பட்டு ஆக்கப்பட்டிருந்தது அப்பாடல்.  ஒரு வீம்புக்காகத்தான் அதை மனப்பாடம் செய்தேன்.  புரிந்துகொள்ளக் கஷ்டமாக இருக்கும், அல்லது நினைவில் வைத்து பரீட்சையில் எழுதக் கஷ்டமாக இருக்கும் பகுதிகளை நான் பொதுவாகப் படிப்பதில்லை.  இந்தப்பாடலை மனப்பாடம் செய்ய என்னை எது தூண்டியது என்று தெரியவில்லை. பள்ளியில் படிக்கையில் அந்தப் பாடலின் அர்த்தம் முழுவதுமாய் விளங்கவே இல்லை.  ஆனாலும், அந்தப் பாடலில் என்னை மயக்குமாறு எதுவோ இருந்தது.  கல்லூரி நாட்களில் பலமுறை எனக்குள்ளேயே அந்தப்பாடலை சொல்லிக்கொள்வேன்.  MCA படித்த காலத்தில்தான் பாடலின் அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமாய் புரியத்தொடங்கியது.  அன்றிலிருந்து இன்று வரை, குறைந்தது ஒரு ஆயிரம் முறையாவது மனதுக்குள் அந்தப் பாடலின் வரிகளைச் சொல்லியிருப்பேன். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் இப்பேர்ப்பட்ட ஒரு பொக்கிஷத்தை எழுதி வ