இடுகைகள்

தெய்வ தரிசனம்

பிரபலமான கோவில்கள் பல உள்ளன. காசி விஸ்வநாதர் ஆலயம். பழனி முருகன் கோவில். திருமலை பெருமாள் கோவில். பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில். இப்படி எத்தனையோ! நம்முடைய இஷ்ட தெய்வத்துக்கும் இப்படிப் புகழ்பெற்ற கோவில்கள் சில (அல்லது பல!) இருக்கும். அத்தனை கோவில்களிலும் மிகுந்த சக்தி வாய்ந்த கோவில் எது என்பதை எப்படிக் கண்டுகொள்வது? இந்தக் கேள்விக்கான பதில் இன்று எனக்குத் தோன்றியது. நம் உள்ளம் என்னும் கோவிலே எந்தத் தெய்வத்துக்கும் சக்தி வாய்ந்த கோவில் . மதுரை மீனாட்சியம்மன் சிலைக்கு நேர் முன்னே நாம் நின்றாலும், அன்னையின் தரிசனம் நம் மனத்தை நிறைக்காவிடில் கோவிலுக்குப் போனதால் பயன் என்ன? பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது சிவன் நம் மனதில் நடனமாடினால் அதைப் போலப் பரவசம் வேறுண்டோ? கோவில்கள் நம் கண்ணெதிரே தோன்றுவன. தெய்வம் நம் மனத்துள் தோன்றுவது. கோவில் தரிசனம் நன்று. தெய்வ தரிசனம் அதைவிட நன்று.

காலங்கடந்து நிற்கும் அறிவுரைகள்

படம்
படத்தில் காண்பது அலுவலகத்தில் எனது பணி மேஜை. நான் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளைக் கண்ணில் படும்படி எழுதி வைத்திருக்கிறேன். ஒரு துறவி போல 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் இவ்வளவு யதார்த்தமான அறிவுரை கொடுத்திருக்கிறார் என்றால் அவர்‌ வாழ்க்கையை எவ்வளவு ஆழமாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்!

குணாவின் அபிராமி

படம்
அபிராமி அந்தாதியில் ‘நாயகி நான்முகி’ எனத் தொடங்கும் பாடல் அம்மையைப் பல பெயர்களும் சொல்லி வணங்குகிறது. தொடர்ந்து இந்தப் பாடலைப் பாராயணம் செய்தால் அம்பிகையை நேரில் பார்க்கலாமாம் . குணா திரைப்படத்தில், நாயகன் குணா நாயகி அபிராமியைத் தேடி அலைகிறான். தற்செயலாக அபிராமியை ஒரு கோவிலில் பார்க்கிறான். காணத் தேடி அலைந்தவனுக்கு அபிராமியை நேரில் பார்க்கக் கிடைக்கும் போது ஒலிக்க வேண்டிய பாடல் ‘நாயகி நான்முகி’ தானே! அந்தப் பாடலுடன் ‘பார்த்த விழி பார்த்தபடி’ என்ற திரைப்பாடல் தொடங்குகிறது. வரிசையில் பலருக்குப் பின் நிற்கும் குணா வரிசை நகர நகர அபிராமியை நெருங்கிச் செல்கிறான். முதல் முதலாக அபிராமிக்கு மிக அருகில் நின்று பார்த்து வியக்கிறான். மீண்டும் அபிராமி அந்தாதியில் இருந்து ஒரு பாடல் ஒலிக்கிறது. ‘பனி மொழி வேதப் பரிபுரையே’ என்ற இந்தப் பாடல் அம்மையின் அழகை வர்ணிக்கும் பாடல் . ரசித்து ரசித்து அவர்கள் குணா படத்தை எடுத்திருக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை படத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை வருகிறது.

அதீத ஒத்திகை (overrehearsal)

இயற்கையிலே சிலருக்கு உணர்திறன் அதிகம். இவர்களை Highly Sensitive Persons என்று அழைக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் எனக்கு இது தெரிய வந்ததிலிருந்து இது பற்றிக் கற்று வருகிறேன். நானும் ஒரு அதியுணர் நபர் (highly sensitive person-கு எனக்குத் தெரிந்த தமிழ்; இதை விட நல்ல மொழிபெயர்ப்பு இருந்தால் சொல்லுங்கள்). இந்த அதியுணர் திறனால் எனக்கு வரும் பிரச்சனைகளைத் தீர்ப்பது பற்றி ஆரம்பத்தில் கற்று வந்தேன். இப்போது அதியுணர் குழந்தைகளை (highly sensitive children) எப்படி வளர்ப்பது என்பதைக் கொஞ்சம் கொஞ்சம் கற்று வருகிறேன். The Highly Sensitive Child புத்தகத்தில் வந்த அறிவுரை இது. உங்களுடைய அதியுணர் குழந்தை புதிய சூழ்நிலைகளில் மற்ற குழந்தைகளைப் போல் செயல்பட முடியாமல் போகலாம். போதுமான திறமை இருந்த போதிலும், புதிய சூழலால் திணறிப்போகும் அதியுணர் குழந்தைகளுக்கு செயல்படும் ஆற்றல் குறைந்து போகிறது. புதிய சூழலின் ஆதிக்கத்தை நம்மால் குறைக்க முடியாது, ஆனால் செய்ய வேண்டிய செயலை நம் அதியுணர் குழந்தை கண்ணை மூடிக்கொண்டு செய்யக்கூடிய அளவுக்கு ஒத்திகை பார்த்தால் மற்ற குழந்தைகள் அளவுக்கு நம் குழந்தைகளும் செயல்பட ம

நந்தா

படம்
17 வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் நந்தா படத்தைப் பார்த்தேன். முன்பு போலவே இப்போதும் பிடித்திருந்தது.  பாலா எடுத்த படங்களிலேயே சிறந்த படம் என்று நான் நினைப்பது இந்தப் படத்தைத் தான். நந்தா, சேது இரண்டு படங்கள் தவிர அவர் எடுத்த படங்களில் எதுவுமே என்னைக் கவரவில்லை என்பது வேறு விஷயம்.

சர்கார்

பொதுவாக அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் நான் பார்ப்பதில்லை. மனைவிக்கு விஜய் பிடிக்கும் என்பதால் சர்கார் படம் பார்க்கப் போயிருந்தேன். படம் பார்க்கும் போது தோன்றிய விஷயம். தமிழ்ப் படங்களில், அதிலும் முக்கியமாக பெரு நடிகர்கள் நடிக்கும் படங்களில், வில்லன் முட்டாளாகத் தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சர்கார் படமும் அந்த விதிக்கு உட்பட்டே இருக்கிறது. முப்பது வருடங்களுக்கு மேல் பலரையும் ஏமாற்றி ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டியெழுப்பிய வில்லன் நாயகனிடம் பேசும் ஒவ்வொரு முறையும் அநியாயத்துக்கு நேர்மையாக இருக்கிறார். இராமன் வேடமணிந்ததுமே இராவணனுக்கு அடுத்தவர் மனைவி மேல் ஆசை போய்விட்டது என்று ஒரு கதை சொல்வார்கள். அது போல நாயகன் முன் நிற்கும் போதெல்லாம் வில்லன் வாக்குமூலம் கொடுக்கிறார். இராதா ரவி சவால் விட்டு பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் காட்சிகளும் கொஞ்சம் கூட யதார்த்தம் இல்லாதவை. இந்தப் படத்தை ஒரு ‘கலைப்படைப்பு’ என்ற கண்ணோட்டத்தில் மதிப்பிட்டால் இப்படிப் பல குறைகள் சொல்லலாம். ஆனால் இது ஒரு கலைப் படைப்பல்ல. இது ஒரு பிரச்சாரப் படம். ஏ ஆர் முருகதாஸின் மற்ற படங்களைப

இப்போது நான் சுக்குத் தண்ணி ரசிகன்

படம்
காஃபி குடிக்கும் பழக்கம் சின்ன வயதிலிருந்தே எனக்கு உண்டு. காஃபியின் மணமும் சுவையும் எப்போதுமே என்னை ஈர்ப்பவை. இப்போது சில மாதங்களாக எனக்கு ஜீரணக் கோளாறு இருப்பதால் காஃபியை நிறுத்திப் பார் என்று ஒரு நண்பர் அறிவுரை கூறினார். ஒரு வாரம் காஃபியே குடிக்கவில்லை. ஜீரணக் கோளாறு முற்றிலும் சரியாகவில்லை, ஆனால் இரவில் ஆழ்ந்த தூக்கம் வருகிறது. முன்பு காலை 7:30 மணிக்கு முன் எழுவதே கடினம்; ஆனால் இப்போது சுலபமாக 6:30 மணிக்கு விழித்து விடுகிறேன். இருந்தாலும் காஃபி குடிப்பதை நிறுத்துவது கஷ்டமாகத்தான் இருந்தது. பிறகு தான் யோசித்து நம் ஊரில் கிடைக்கும் சுக்கு மல்லி காஃபியைக் குடித்தால் என்ன என்று யோசித்தேன். பெயர் தான் சுக்கு மல்லி “காஃபி”யே தவிர அதில் காஃபிப் பொடி சேர்ப்பதே கிடையாது. (அதனால் இப்போது அதை “சுக்குத் தண்ணி” என்று நான் அழைக்கிறேன்.) வீட்டிலேயே சுக்கு, மிளகு, மல்லி எல்லாம் வறுத்து அரைத்து ஒரு பாட்டிலில் அடைத்து அலுவலகத்திற்குக் கொண்டு போய் விட்டேன். மாலை நேரத்தில் அலுவலகத்தில் தேநீர் போடுவதற்காக வைத்திருக்கும் வெந்நீரில் சுக்குத் தண்ணி தயார் செய்து குடிக்கிறேன். இரண்டு நாளிலேயே அதன் சுவை