இரு பறவைகள்
“ இலக்கியம் நம்மைக் கலைத்துப் போட்டு விடுகிறது. நம்மை நாமே திரும்பத் தொகுத்துக்கொள்ளும்போது நாம் கற்றுக் கொள்பவையே அந்த இலக்கியத்திலிருந்து நமக்குக் கிடைப்பவை ” என்று எங்கோ ஜெயமோகன் எழுதியதாய் ஞாபகம். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஒரே படைப்பு வேறுபட்ட காலகட்டங்களில் நம்மை வெவ்வேறு விதங்களில் கலைத்துப் போட்டுவிடக் கூடும். திரும்பி நம்மை நாமே தொகுத்துக் கொள்கையில் நாம் வேறுவேறான விஷயங்களைக் கண்டறியக் கூடும். எனவே தான் மறுவாசிப்பு என்பதை நான் முக்கியமாகக் கருதுகிறேன். என்னை மிகவும் பாதித்த நாவல்களை மீண்டும் ஒருமுறையேனும் வாசிக்க வேண்டுமென விரும்புவேன். ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் நாவலை சில வருடங்களுக்கு முன் முதல் முதலாக வாசித்தேன். பல விதங்களில் அந்த நாவல் அப்போது பிடித்திருந்தது/என்னைப் பாதித்திருந்தது. அவ்வப்போது அதன் சில பகுதிகள் மட்டும் நினைவில் வந்துபோகும். தூத்துக்குடி மாதா கோவிலுக்குத் தற்செயலாக மனைவி மற்றும் உறவினர்களுடன் சென்றிருந்தபோது இந்நாவலில் ஏசு கிறிஸ்து வரும் அத்தியாயம் நினைவுக்கு வந்து மன எழுச்சி தந்தது. அதை மனைவியிடம் சொன்னேன், ஆனால் இந்த