சில நேரங்களில் நான் சுய சித்திரவதை செய்துகொள்வதுண்டு. இப்போதும் அப்படித்தான், சீமானின் வாழ்த்துகள் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தம்பி படத்தை அந்தப் படம் வந்த புதிதிலேயே பார்த்திருந்தேன். வாழ்த்துகள் படத்தின் டிரெய்லரைப் பார்க்கையிலேயே கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. இந்தப் படத்தின் பட்ஜெட்டில் மிக அதிகமாகச் செலவு செய்யப்பட்டது பேப்பருக்கும் மை-க்கும் தான் இருக்குமோ என்று தோன்றுமளவுக்குப் படம் முழுவதும் வசனம் வசனம் வசனம் தான். அதிலும் கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவுக்கு செயற்கையான வசனங்கள். "தம்பி தான் எனக்கு பயணச்சீட்டு வாங்கி அனுப்பினான்" என்று ஒரு விருந்தினர் சொல்வதாக வரும் காட்சி ஒன்றே போதும். படத்துல தமிழ் மட்டும் தான் பேசுவாங்களாம். மாதவனுடைய பல்ஸர் பைக்கில் ஸ்டிக்கரைக் கிழித்து தமிழில் பெயர் எழுதுமளவுக்கு அவர்களுக்கு புத்தி பேதலிக்கவில்லையே என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். இந்தப் படத்தில் எனக்கு மிகவும் நெருடலாகத் தோன்றிய விஷயம் வேறொன்று. பாவனாவின் குடும்பம் ஒரு லட்சியக் குடும்பம் என்ற அளவுக்கு பில்டப் கொடுக்கப்பட்டு காட்டப் படுகிறது. ஆனால் மனிதர்களுக்கு இட
வைரமுத்துவின் ‘பாற்கடல்’ வாசித்துக் கொண்டிருக்கிறேன். புத்தகத்தின் முன்னுரை வாசிக்கையில் தோன்றியது “காலையில் நாஞ்சில் நாடன் வாசித்து முடித்த கையோடு மதியம் வைரமுத்துவை வாசிக்கத் தொடங்குவது நல்ல யோசனையில்லை” என்பது தான் :-) இருந்தாலும் புத்தகத்தில் சில நல்ல பகுதிகள் இல்லாமல் இல்லை. பாற்கடல், குமுதத்தில் வெளியான கேள்வி-பதில் தொகுதி. பல கேள்வி-பதில்கள் என்னைக் கவர்ந்தன. ஒருசிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கே: வாழ்க்கை என்பது? ப: கல்யாணத்திற்கும் இழவுக்கும் ஆள்சேர்க்கும் போராட்டம். கே: தமிழ்த் திரைப்படங்களில் நீங்கள் அதிகம் கேட்ட வசனம்? ப: “நீங்க பேசுனதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்.” கே: யாரோடு பேசினால் அனுபவம் கிடைக்கும்? ப: ஓய்வுபெற்ற நீதிபதிகள்; காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவல்துறை அதிகாரிகள்; அரைவயதில் களமிழந்த அரசியல்வாதிகள்; நட்சத்திரங்களின் ஒப்பனைக் கலைஞர்கள்; கட்டிய வீட்டில் திண்ணைக்கு எறியப்பட்ட கிழவன்; மூத்த சவரத் தொழிலாளி; விதவைகளின் மாமியார் மற்றும் விலைமகளின் தாயார்.
கடந்த சில மாதங்களாக என் வாயின் இரண்டு பக்கங்களிலும் காயமாகி இருந்தது. சிட்னியில் வீட்டில் இருக்கும்தோறும் காயம் மட்டுப்படாமலே இருந்தது. மருந்து போட்டால் கொஞ்சம் குறையும், ஆனால் ஓரிரு நாள்களிலேயே மீண்டும் வந்துவிடும். பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் காயம் சிலநாள்களிலேயே ஆறியது; சிட்னி திரும்பி வந்ததும் சிலநாள்களிலேயே காயம் பழையபடி திரும்பி வந்தது. காயத்தைச் சுற்றிலும் எப்போதும் தோல் வறண்டிருக்கும். முதலில் நான் நினைத்தது என்னவென்றால் சிட்னியின் பருவநிலை காரணமாக என் தோல் வறண்டு போகிறது. மிகுந்த வறட்சியால் தோல் வெடித்துக் காயம் உண்டாகிறது. பயணம் செய்த இடங்களின் (கோவில்பட்டி, சான் ஃபிரான்சிஸ்கோ, பாஸ்டன்) பருவநிலையை — முக்கியமாக காற்றிலுள்ள ஈரப்பதத்தை (humidity) — சிட்னியுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் பெரிய மாறுதல் ஒன்றும் தெரியவில்லை. அதனால் நான் நினைத்தது சரியான காரணம் இல்லை என்று தெரிந்தது. ஆனாலும் வேறு எந்த வகையிலும் சிட்னியில் இருக்கும்போது மட்டும் வரும் காயங்களை விளக்க முடியவில்லை. சென்ற வாரம் தற்செயலாக எனக்குத் தோன்றியது. ஒருவேளை நான் உபயோகிக்கும் சோப் எனது காயங்களுக்குக
கருத்துகள்
கருத்துரையிடுக