இடுகைகள்

2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தெய்வ தரிசனம்

பிரபலமான கோவில்கள் பல உள்ளன. காசி விஸ்வநாதர் ஆலயம். பழனி முருகன் கோவில். திருமலை பெருமாள் கோவில். பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில். இப்படி எத்தனையோ! நம்முடைய இஷ்ட தெய்வத்துக்கும் இப்படிப் புகழ்பெற்ற கோவில்கள் சில (அல்லது பல!) இருக்கும். அத்தனை கோவில்களிலும் மிகுந்த சக்தி வாய்ந்த கோவில் எது என்பதை எப்படிக் கண்டுகொள்வது? இந்தக் கேள்விக்கான பதில் இன்று எனக்குத் தோன்றியது. நம் உள்ளம் என்னும் கோவிலே எந்தத் தெய்வத்துக்கும் சக்தி வாய்ந்த கோவில் . மதுரை மீனாட்சியம்மன் சிலைக்கு நேர் முன்னே நாம் நின்றாலும், அன்னையின் தரிசனம் நம் மனத்தை நிறைக்காவிடில் கோவிலுக்குப் போனதால் பயன் என்ன? பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது சிவன் நம் மனதில் நடனமாடினால் அதைப் போலப் பரவசம் வேறுண்டோ? கோவில்கள் நம் கண்ணெதிரே தோன்றுவன. தெய்வம் நம் மனத்துள் தோன்றுவது. கோவில் தரிசனம் நன்று. தெய்வ தரிசனம் அதைவிட நன்று.