ஜெயகாந்தன்: என்னைப் பிரமிக்க வைக்கும் தத்துவவாதி

ஆதி இந்து மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் ஒருவர்.  காளி கசாப்புக் கடை வைத்திருக்கும் குடும்பத்திலிருந்து வந்து குலத் தொழிலையே செய்து வருபவர்.
ஆதியின் நட்பாலும், அவரது ஆஸ்ரமத்தின் வாழ்க்கையைப் பற்றி அறிய நேர்ந்த அனுபவத்தாலும் காளிக்கு தனது 'கொலைத் தொழிலைப் பற்றி' ஒருவகைக் குற்ற உணர்வு மனத்துள் வளர்ந்ததுதான் கண்ட பலன்.

அதற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள காளி முயன்ற போது, அவன் நம்பிய இந்துமதப் பெரியவர்கள் எல்லாம் ஒரே குரலில் ஜீவகாருண்யத்தைப் பற்றியே அதிகம் பேசினார்கள்!  'தான் ஒருவன் ஜீவகாருண்யவாதியாய் ஆகிவிடுவதால் இந்த விலங்குக்கு என்ன காருண்யம் நேர்ந்துவிடப் போகிறது...?  ஒரு பாவத்திலிருந்து தனியொரு மனிதன் தப்பித்துக் கொள்வதா பிரச்சனை?  அந்தப் பாவமே முற்றாகத் தவிர்க்கப் படுவதற்கு என்ன வழி?  அப்படி தவிர்க்கவொண்ணாத ஒரு செயல் -- ஒரு தொழில் -- ஒரு வாழ்க்கை முறை எப்படி ஒரு பாவமாகும்?  உலகிலுள்ள மனிதர்கள் எல்லோரும் தாவர உணவையே உட்கொள்வது என்று தீர்மானித்து விட்டால், மனித வாழ்க்கை இன்னும் பல நெருக்கடியான பிரச்சனைகளில் சிக்கி அல்லலுறும்.  உலகம் முழுவதற்கும் ஒவ்வாத ஒரு நடைமுறை -- எல்லா மனிதர்களுக்கும் ஒவ்வாத ஒரு சீலம், இந்த இந்துவுக்கு மட்டும் சிறப்பு ஒழுக்கமானது என்ன விந்தை?'
[ஜெயகாந்தனின் ஈஸ்வர அல்லா தேரே நாம் நாவலிலிருந்து எடுத்தது]

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் தான் நான் முதல் முதலில் படித்த ஜெயகாந்தன் கதை.  அதன் பின்னர் எனக்காக அழு, சுயதரிசனம் என்று எத்தனையோ கதைகளில் என்னுடைய சிந்தனையைத் தூண்டியிருக்கிறார் அவர்.  இதற்கெல்லாம் எப்படி அவருக்கு நன்றி சொல்ல முடியுமோ தெரியவில்லை!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்