அச்சம் தவிர்


அஞ்சாதே படத்தின் அச்சம் தவிர் பாடலை சில நாட்களுக்கு முன் தற்செயலாகக் கேட்கும்போது தான் கவனித்தேன்.  புதிய ஆத்திசூடியில் மீண்டும் மீண்டும் பாரதியார் வலியுறுத்துவது பயப்படாமல் இருக்க வேண்டுமென்பதைத் தான்.  கீழ்க்கண்ட அத்தனையும் நேரடியாக பயத்தை விடச்சொல்லும் வரிகள்:
  • அச்சம் தவிர்
  • கீழோர்க்கு அஞ்சேல்
  • கேட்டிலும் துணிந்து நில்
  • சாவதற்கு அஞ்சேல்
  • செய்வது துணிந்து செய்
  • தீயோர்க்கு அஞ்சேல்
  • தொன்மைக்கு அஞ்சேல்
  • தோல்வியில் கலங்கேல்
  • பேய்களுக்கு அஞ்சேல்
கொஞ்ச நாள்களுக்கு முன் என் பயத்தை நானே நேரடியாகப் பார்க்க நேரிட்டது.  சின்னச் சின்ன விஷயங்களில் கூட பயப்படுவதையும் அதனால் வாழ்க்கையில் தோன்றும் மாறுதல்களையும் பார்க்க பிரமிப்பாக இருந்தது.  பயம் புற்றுநோய் போலப் பரவி நம் வாழ்க்கையையே அழித்துவிட வல்லது.  அதனால் தானோ என்னவோ பாரதியும் பயத்தை உதறுமாறு பல கவிதைகளில் அறிவுறுத்துகிறார்.  (அச்சமில்லை பாட்டை அறியாதவர் உள்ளனரா என்ன!)

மேலுள்ள வரிகள் தவிர்த்து, புதிய ஆத்திசூடியில் என்னைக் கவர்ந்த வரிகள் இவை:
  • கற்றது ஒழுகு
  • காலம் அழியேல்
  • தன்மை இழவேல்
  • தாழ்ந்து நடவேல்
  • துன்பம் மறந்திரு
  • தூற்றுதல் ஒழி
  • தவத்தினை நிதம் புரி
  • நாளெல்லாம் வினை செய்
  • நெற்றி சுருக்கிடேல்
  • நொந்தது சாகும்
  • புதியன விரும்பு
  • வருவதை மகிழ்ந்துண்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

ஆயிரங்காலப்பயிர்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்