நெற்றிக்கண்
விசு படங்கள் எனக்குப் பிடிக்கும். அதிலும் குறிப்பாக எஸ்வி சேகர், கிஷ்மு எல்லாம் இருந்து விட்டால் சொல்லவே வேண்டாம். விசு படத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள் தங்கள் தரப்பு நியாயங்களை எப்போதுமே அதிரடியாகத் தான் சொல்வார்கள். அதிகமான நாடகத்தன்மை இருக்கும் -- அந்த நாடகத் தன்மைக்காகவே அந்தப் படங்களை நான் ரசித்திருக்கிறேன்.* பிடிக்கும் என்றாலும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி வாழ்க்கையைப் பற்றி அவர் படங்கள் என்னை பாதித்ததில்லை. நெற்றிக்கண் . பார்க்க ஆரம்பிக்கையில் பாலச்சந்தர் படம் என்று தான் நினைத்தேன். (பட ஆரம்பத்தில் யார் பெயரையும் கவனிக்கவில்லை.) பாலச்சந்தர் படம் மாதிரி இல்லாததால் கொஞ்சம் ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. பாலச்சந்தருடைய பாணி இதுவல்ல. விசுவைப் போல "குற்றம் புரிந்தவனுக்குத் தண்டனை" என்ற மேம்போக்கான நியாயம் பேசும் படங்கள் பாலச்சந்தருடையவை அல்ல. பாலச்சந்தர் படங்களில் "கெட்டவர்கள்" யாரும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம், அந்த நியாயங்களைச் சுற்றி நகரும் கதையில் நல்லவரோ கெட்டவரோ இருப்பதில்லை. நெற்றிக்கண் படம் முடிந்த பின் சக்கரவர்த