இடுகைகள்

2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வேதனை தர்க்கம் அறியாது

நான் யுனிவர்சிட்டியில் படித்த காலங்களில் என்னைக் கவனித்தவர்களுக்குத் தெரியும் -- நடந்து போகையில் பக்கத்தில் இருக்கும் செடியின் இலைகளை கைகளால் மெல்ல வருடியபடியே செல்வேன்.  அப்படியெல்லாம் செய்தால் செடி நன்றாக வளரும் என்று எங்கோ படித்ததாக ஞாபகம்.  இல்லாவிட்டாலும், பாசமான ஒரு தொடுதல் என்பது ஒரு நல்ல அனுபவம்.  செடிக்கு அது நன்றாக இருக்கிறதோ இல்லையோ, நமக்கு நல்லது :) வாரங்கள் கழித்து அசைவு கொடுக்கத் தொடங்கியிருக்கும் மூட்டு சிலநேரங்களில் வேதனை என்றால் என்ன என்று எனக்கு விளக்கமாகப் பாடம் எடுக்கத் தொடங்கி விடுகிறது.  விரல் நுனியால் அதனை மெல்ல, பூப்போல வருடுவது ரொம்பவே ஆறுதல் அளிக்கிறது. அசைய முடியாமல் உடைந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவரும் அந்த மூட்டுக்கு மனதிற்குள் நன்றி சொல்கிறேன் அவ்வப்போது.  பைத்தியக்காரத்தனமாகக் கூட இருக்கலாம்.  ஆனால் இப்போதைக்கு ஆறுதல் அளிக்கிறது.  வலியில் இருப்பவனிடம் தர்க்க நியாயம் பேசமுடியாது என்பது உண்மைதான்.  நூறு ரூபாய்க்கு தனது vote-ஐ விற்பவர்கள் இன்னும் நெடுநாட்களுக்கு இருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

அழுதபிள்ளை

பால்குடி மறக்க வைத்த நாள்தான் நினைவுக்கு வந்தது. மிட்டாய் கேட்டு அழுபவனை சமாதானம் செய்ததும். தீபாவளிப் பட்டாசு, நண்பனை மாதிரியே கலர் சட்டை, கல்லூரிக்குப் போக மோட்டார்பைக், செல்போன். பால் பாத்திரத்தை மட்டுமே பார்த்த அழுதபிள்ளை அவன். இவள் மட்டும் கிடைப்பாள் என்று எதற்கு நம்பினான்? என்னை இப்படி நாதியின்றி நிற்க வைக்கத்தானா?

கால்தானே

தன்னையறியாமல் வந்த விசும்பலை மீண்டும் அடக்கினேன். கண்ணீர் வந்துவிடவில்லை. நல்லவேளை, யாரும் கவனிக்கவுமில்லை. பயந்தா போயிருக்கிறேன்? தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன் "கால்தானே போய்விட்டது. அதனாலென்ன?"
ஆழ்ந்த ஒரு வெறுமை உடலிலும் மனதிலும் உயிரிலும். ஒவ்வொரு அணுவையும் வியாபிக்கும் முழுமையின்மை. உடைந்து நொறுங்கி நான் காற்றில் கலக்குமுன் உதடுகளால் நிரப்பிடு என்னை!

காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப

தற்செயலாக பாகவதரின் இந்தப் பாடலைக் கேட்க நேரிட்டது.  மனம் கனக்கும் வேளைகளில் எப்போதுமே கவிதையின் மடியில் சரணடைவது என் வழக்கம்.  YouTube-ல் கண்ணதாசன் பாடல்களைத் தேடும்போது தற்செயலாக இந்தப் பாடலைக் கண்டுபிடித்தேன். பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள் போல் காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப - வீண் காலமும் செல்ல மடிந்திடவோ முதல் முறை கேட்கையில் ரொம்பவே அற்புதமாகத் தோன்றியது.  திரும்ப ஒருமுறை கேட்கும்போது தான் ஒரு அடிப்படைத் தவறு புரிந்தது.  காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப விலங்குகள் அலைவதில்லை.  விலங்குகள் பயத்தாலோ அல்லது பசியாலோ மட்டுமே மற்றவைகளைத் தாக்கும்.  விலங்குகள் நீலப்படம் பார்ப்பதோ வற்புறுத்தி உடலுறவு கொள்வதோ கிடையாது.  காமத்திலும் வன்முறையிலும் விலங்குகள் போல் நாம் நேர்மையாய் இருந்தால் உலகில் இத்தனை பிரச்சனைகள் இருக்காது! (என்னாதுங்க? கவிதை சொன்னா அனுபவிக்கணும், ஆராயக்கூடாதா.  சரியாச் சொன்னீங்க :)

காட்டுமலர்

முதல் முதலில் அவளைப் பார்க்கையில் "அழகாய் இருக்கிறாள்" என்று தோன்றியதே தவிர வேறொன்றும் பெரிதாய்த் தோன்றவில்லை. அவள் அழகு தான், ஆனாலும் முதல் பார்வையிலேயே மனதில் ஒட்டிக்கொண்டு நீங்க மறுக்கும் பேரழகில்லை. அப்போது அப்படித்தான் தோன்றியது. நாட்கள் செல்லச் செல்ல அவளோடு நேரம் செலவழிக்கத் தொடங்கினேன். அவள் மேலும் மேலும் அழகாகத் தெரிந்தாள். இரவு தூங்குமுன்பும் காலையில் அரைத்தூக்கக் கனவிலும் அவளையே நினைத்துக் கிடந்தேன். அந்த முகம், அந்த சிரிப்பு, அவளது குரல் -- எல்லாமே என்னை ஒரு மயக்கத்தில் வைத்திருந்தன. எல்லா வழிகளையும் பயன்படுத்தி அவளை பார்க்கவும் பேசவும் செய்தேன். நெருங்க நெருங்கத்தான் தூரம் தெரியும். ரொம்பவும் நெருங்கினால் எதுவுமே தெரியாது. அவளைப் பற்றி எனக்குப் புரியப்புரிய மனம் கசப்பே அடைந்தது. அவள் செல்லும் பாதை என் பாதையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எனக்கும் அவளுக்கும் எதுவுமே பொதுவாக இல்லை. ஆனாலும் நானிருந்த மனநிலையில் எதையும் சட்டை செய்வதாயில்லை என் மனம். கனவிலேயே வாழ்ந்தேன். எப்பேர்ப்பட்ட கனவாயிருந்தாலும் விழித்தே ஆக வேண்டுமல்லவா? நிஜம் வெயிலாய் மனதை சுட்டதில

பிளாஸ்டிக் குடும்பம்

சில நேரங்களில் நான் சுய சித்திரவதை செய்துகொள்வதுண்டு. இப்போதும் அப்படித்தான், சீமானின் வாழ்த்துகள் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தம்பி படத்தை அந்தப் படம் வந்த புதிதிலேயே பார்த்திருந்தேன். வாழ்த்துகள் படத்தின் டிரெய்லரைப் பார்க்கையிலேயே கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. இந்தப் படத்தின் பட்ஜெட்டில் மிக அதிகமாகச் செலவு செய்யப்பட்டது பேப்பருக்கும் மை-க்கும் தான் இருக்குமோ என்று தோன்றுமளவுக்குப் படம் முழுவதும் வசனம் வசனம் வசனம் தான். அதிலும் கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவுக்கு செயற்கையான வசனங்கள். "தம்பி தான் எனக்கு பயணச்சீட்டு வாங்கி அனுப்பினான்" என்று ஒரு விருந்தினர் சொல்வதாக வரும் காட்சி ஒன்றே போதும். படத்துல தமிழ் மட்டும் தான் பேசுவாங்களாம். மாதவனுடைய பல்ஸர் பைக்கில் ஸ்டிக்கரைக் கிழித்து தமிழில் பெயர் எழுதுமளவுக்கு அவர்களுக்கு புத்தி பேதலிக்கவில்லையே என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். இந்தப் படத்தில் எனக்கு மிகவும் நெருடலாகத் தோன்றிய விஷயம் வேறொன்று. பாவனாவின் குடும்பம் ஒரு லட்சியக் குடும்பம் என்ற அளவுக்கு பில்டப் கொடுக்கப்பட்டு காட்டப் படுகிறது. ஆனால் மனிதர்களுக்கு இட

உபபாண்டவம்

நான் மூன்று அல்லது நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த சமயம். எங்கள் வகுப்பில் யாரேனும் புதிய சினிமா ஏதேனும் பார்த்திருந்தால் அடுத்த நாளே எல்லா நண்பர்களுக்கும் "கதை சொல்வார்கள்". கதை சொல்வது என்பது முதல் சீனிலிருந்து கடைசி சீன் வரை அத்தனையையும் படத்தில் பார்த்த மாதிரியே விவரிப்பது. எனக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும், எப்படி இத்தனை விஷயத்தை ஞாபகத்தில் வைத்து கோர்வையாகச் சொல்கிறார்கள் என்று. அவர்கள் சொல்லும் கதைகளிலெல்லாம் கிட்டத்தட்ட எல்லா சண்டைகளுமே "நல்லவனுக்கும் கெட்டவனுக்கும்" இடையில் நடப்பவையே. கெட்டவனோட ஆட்கள், ரஜினியோட அப்பா கடையில வந்து லஞ்சம் கேட்பாங்க. அவர் இல்லைனு சொன்னதும் கடையில உள்ளதை எல்லாம் உடைப்பாங்க. அவர் நடுவில வந்து கெஞ்சும்போது, அதுல ஒருத்தன் ஓங்கி கன்னத்துல அடிப்பான். ரஜினியோட அப்பா ரோட்டில போய் விழுந்திருவாரு. அவர் விழுந்த இடத்துல ஒரு காலை மட்டும் காட்டுவாங்க. அவன் அவரைத் தூக்கி விட்டுட்டு ரௌடிங்க கூட சண்டை போட்டு அவரைக் காப்பாத்துவான். ஆனா நிஜத்துல அவனும் கெட்டவன் தான். இருந்தாலும் இந்த ஒரு தடவை மட்டும் அவன் கெட்டவங்களோடயே சண்டை ப

மூன்றாம் காதல்

"Being The One is like being in love. No one can tell you you're in love. You just know it." என் முதல் காதலை நான் கண்டுகொண்ட தருணம் இன்னும் நினைவிலிருக்கிறது. பாயில் புரண்டு புரண்டு படுத்து, தூக்கம் பிடிக்காமல் அவளையே நினைத்து மனம் புலம்பிக் கொண்டிருந்த பொழுதுகள். காதல் தோல்வி என்று அதை அழைக்கப் பிடிக்காமல் "ஏற்கப்படாத காதல்" என்ற பெயரை அதற்குச் சூட்டிக்கொண்டு கைக்கிளைத் திணைப் பாடல்களை படித்துப் பார்க்கலாமா என்று திரிந்த நாட்கள் பல. அவள் பெயரையே சொல்லிப் புலம்பி அப்படியே தூங்கிப்போன நாட்கள் பல. அந்த கனத்தைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத அந்த ஓர் இரவு இன்னமும் நினைவிலிருக்கிறது. கண்மூடித் திறக்கும் முன் இரண்டாம் காதலில் விழுந்து விட்டிருந்தேன். இரண்டு பேரையுமே உயிர் உருக நினைக்கும் கணங்கள் வாய்த்தன. அப்போது [சிந்து பைரவி] ஜே.கே.பி சிந்துவின் மேலும் பைரவியின் மேலும் ஒரே நேரத்தில் காதல் வயப்பட்டிருந்தது ஒரு புதிய ஒளியில் தெரிந்தது. என்னுடைய இரண்டு காதலுமே ஏற்கப்படாமல் போனது மனதில் ஆறாத காயம் ஏற்படுத்தின என்பது உண்மைதான். ஆனால் காயங்களெல்லாமே தீங்க

புதிய தத்துவம் நம்பர் 341

பொண்ணுங்க பூ மாதிரி. அழகா இருக்குதேனு நினைச்சு பையில எடுத்து வச்சா அன்னைக்கு சாயங்காலமே வாடிப் போயிரும், அடுத்த நாளே காஞ்சு போயிரும். :-) குறிப்பு (Jun 21, 2008): அபத்தமாக இப்படி எழுதிவைத்து பல நாட்கள் ஆனபிறகு பெண்களை பூவுடன் ஒப்பிடும் ஒரு தரமான கட்டுரை கிடைத்தது. அதையும் படித்து விடுங்களேன் :)

பீமா

படம் பார்த்து முடித்த அடுத்த நொடியில் இதை எழுதுகிறேன். லிங்குசாமி 'ஜி'க்கு அடுத்து இப்படி ஒரு படம் எடுத்திருக்க வேண்டியதில்லை. நான்கு வரிக் கவிதையில் சொல்ல முடிந்ததை படமாக எடுப்பதோ, மற்றவர்களுக்கு புத்தி சொல்கிறேன் பேர்வழி என்று படம் எடுப்பதோ எப்படி அவர்களுக்கு மனநிறைவை அளிக்கிறது என்றுதான் புரியவில்லை. படத்தில் மொத்தமே இரண்டு சீன் அல்லது வசனம் தான் எனக்குப் பிடித்தது. எந்தக் காட்சி என்று இப்போது நினைவிலில்லை. தயிர்சாதத்தைக் கூட கேவலமாக சமைக்க முடியும் என்று எங்கள் ஆபிஸில் சாப்பிட்டால் புரியும். அதுபோலவே ரொம்ப எளிதாக நன்றாக அமைக்க முடிந்து காட்சிகளில் கூட கோட்டை விட்டது எனக்கு ஏமாற்றமே. பல காட்சிகள் பழைய படங்களிலிருந்து சுடப்பட்டது வேறு இம்சை. " யார் சாமி இவன்? சத்தியமா சொல்றேன், இருபத்தஞ்சு வயசுல என்னையே பாத்த மாதிரி இருக்கு டயலாக்கை டிரெய்லர்ல பாக்கும்போதே டவுட் ஆனேன்" என்றுதான் மனதிற்குள் தோன்றுகிறது :)

விண்ணப்பம்

நடு இரவில் கண்விழிக்கும் போதும் கொட்டும் மழையில் வீடு திரும்பும் போதும் நாக்கில் காய்ச்சல் கசக்கும் போதும் நாவலின் கடைசிப் பக்கம் வாசிக்கும் போதும் ஜன்னல் இருக்கை ரயில் பயணத்திலும் கர்ப்பக்கிரகத்திலிருந்து வெளிவந்தவுடனும் உன் முகம் பார்க்கத்தான் வேண்டுகிறேன். என்னோடே இருப்பாயா, எப்போதும்?

மனம்

மறுபடி அடுக்கி நிமிர்வதற்குள் மீண்டுமொரு காற்று. மனமும் சீட்டடுக்கு மாளிகைதான்.

அறிகுறிகள்

மடியில் படுத்து அழத்தோன்றும். விஸ்வரூபம் கண்ட அர்ஜுனனாய் மலைத்து நிற்கும். கண்மூடி இருக்கையில் தலையின்கீழ் உடலும், உடலின்கீழ் உலகும் நழுவிப்போய் நாடகமாடும். ஏதோ ஒரு வசனத்தை திரும்பத் திரும்ப சொல்லிப் பார்க்கும். மரணப்படுக்கையிலும் ஒவ்வொரு காதலிலும்.

குருவும் சீடனும்

மேன்மையான குருநாதர்களைக் கொல்வதற்குப் பதில் பிச்சையெடுத்து உண்பது சிறந்தது. உலகியல் விருப்பமுள்ள ஆசிரியர்களைக் கொன்றபின் அவர்களின் உதிரம் படிந்த போகங்களைத் தானே இங்கு நான் அடைய முடியும்? (215) என்று கீதை இரண்டாம் அத்தியாயத்தில் சொல்கிறது. ஒரே சுலோகத்திலேயே அர்ஜுனன் குருக்களை மகானுபவர்கள் என்றும் பொருளாசை கொண்டோர் என்றும் ஏன் அழைக்கிறான்? இதற்குப் பதில் சொல்ல முடியுமானால் உங்களுக்கு கீதை புரிந்திருக்கிறது என்று நான் சம்மதிக்கிறேன். ••••••••••• கேள்வி: நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறீர்களா? குரு: நம்பிக்கை என்ற சொல்லே சரியில்லையே. நான் ஒரு விஞ்ஞானி. உண்மையைத் தேடிக் கண்டுபிடித்து அங்கீகரிப்பதுதான் என்னுடைய வழக்கம். கடவுள் இருப்பது கடவுள் குறித்த வரையறை மூலமே. அதனால் அந்த வரையறை தவறா சரியா என்று கேட்க வேண்டும். அப்படியென்றால் கடவுளுக்கு நான் கொடுக்கும் வரையறையை முதலில் தேட வேண்டும். உங்களுக்குத் தவறு நடக்கும்போதெல்லாம் எது சரியாகவே இருக்கிறதோ அதுதான் கடவுள். What is that which is right when you are wrong is God. ••••••••••• இவை குருவும் சீடனும் என்னும் எனி இந்தியன் பத

குழப்பம் leads to புலம்பல்

இது வரை என் வாழ்க்கையில் நடந்த எல்லாமே நான் மட்டும் சம்பந்தப் பட்டவை. இன்னும் சில மாதங்களில் நான் ஒரு முக்கியமான முடிவு எடுக்க வேண்டும். என் திருமணம் பற்றிய முடிவு அது. பல்வேறு காரணங்களுக்காக நான் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வதே எனக்கு சரிப்படும் என்று நினைக்கிறேன். அவற்றுள் முக்கியமான சில: யாரென்றே தெரியாத ஒரு பெண்ணை வீட்டில் பார்த்து பேசி மணம் முடிப்பது என்பதை நினைத்தாலே எனக்கு அருவெறுப்பாயுள்ளது. "பெண்ணுக்காக திருமணம்" என்றல்லாமல் "திருமணத்திற்காக பெண்" என்ற நிலையை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. பஸ்ஸில் ஆபிஸ் போக கஷ்டமாக இருக்கிறது என்று நான் வாங்கிய பைக்கிற்கும் நான் கூட வாழப்போகும் மனைவிக்கும் அப்புறம் என்ன வித்தியாசம் எஞ்சுகிறது? என்னைப் பொருத்தவரை திருமண வாழ்வில் மிக முக்கியமானது காதல். சிந்துபைரவி படம் என்னை ரொம்பவே பாதித்தது. ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் எப்படிப்பட்ட நெருக்கம் இருக்க வேண்டும் என்பதையும் எப்படிப்பட்ட நெருக்கம் நடைமுறையில் சாத்தியம் என்பதையும் அந்தப்படம் தெளிவாகவே காட்டுகிறது. JKBக்கு அவரது மனைவி பைரவியின் மேல் இருப்பதும் காதல்தான்.