உபபாண்டவம்
நான் மூன்று அல்லது நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த சமயம். எங்கள் வகுப்பில் யாரேனும் புதிய சினிமா ஏதேனும் பார்த்திருந்தால் அடுத்த நாளே எல்லா நண்பர்களுக்கும் "கதை சொல்வார்கள்". கதை சொல்வது என்பது முதல் சீனிலிருந்து கடைசி சீன் வரை அத்தனையையும் படத்தில் பார்த்த மாதிரியே விவரிப்பது. எனக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும், எப்படி இத்தனை விஷயத்தை ஞாபகத்தில் வைத்து கோர்வையாகச் சொல்கிறார்கள் என்று. அவர்கள் சொல்லும் கதைகளிலெல்லாம் கிட்டத்தட்ட எல்லா சண்டைகளுமே "நல்லவனுக்கும் கெட்டவனுக்கும்" இடையில் நடப்பவையே. கெட்டவனோட ஆட்கள், ரஜினியோட அப்பா கடையில வந்து லஞ்சம் கேட்பாங்க. அவர் இல்லைனு சொன்னதும் கடையில உள்ளதை எல்லாம் உடைப்பாங்க. அவர் நடுவில வந்து கெஞ்சும்போது, அதுல ஒருத்தன் ஓங்கி கன்னத்துல அடிப்பான். ரஜினியோட அப்பா ரோட்டில போய் விழுந்திருவாரு. அவர் விழுந்த இடத்துல ஒரு காலை மட்டும் காட்டுவாங்க. அவன் அவரைத் தூக்கி விட்டுட்டு ரௌடிங்க கூட சண்டை போட்டு அவரைக் காப்பாத்துவான். ஆனா நிஜத்துல அவனும் கெட்டவன் தான். இருந்தாலும் இந்த ஒரு தடவை மட்டும் அவன் கெட்டவங்களோடயே சண்டை ப