இடுகைகள்

ஏப்ரல், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிரபஞ்சங்கள்

நண்பன் சொன்னான், "பிரபஞ்சம் மிகப் பெரியது."
நான் சொன்னேன், "உன் பிரபஞ்சம் பிரம்மாண்டமானது என்று சொல்."

"எல்லோருடையதும் இந்த ஒரே பிரபஞ்சம் தானே?"
"இல்லை.  எத்தனை ஜோடிக் கண்கள் உள்ளனவோ, அத்தனை பிரபஞ்சங்கள் உள்ளன."

சுதர்மம்

உனக்கு வருவதை நீ செய்.
இறைத்தோறும் ஊறும் கிணறு.
இறைத்தோறும் காலியாகும் குடம்.

கருடன் சொன்னது

அந்த வெள்ளைக்காரன் மதிக்கத்தக்க தோற்றத்துடன் தான் இருந்தான்.  ஏன் போலீஸ் கூட்டிப் போனார்கள் எனப் புரியவில்லை.  அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பேசுவதைக் கேட்டதில் தெரிய வந்தது.  பாஸ்போர்ட்டைத் தொலைத்து விட்டானாம்.  இரத்தமும் சதையுமான ஒரு மனிதன்
ஒரு முப்பது பக்கப் புத்தகமில்லாமல் செல்லுபடி ஆவதில்லை.

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.

சக பயணி்

ஒரே விமானம்தான் என்றாலும்
அவரவர்க்கு அவரவர் இருக்கை.

சிலருடைய ஜன்னலில்
விமானத்தின் இறக்கைகள்
தெரியும்.

சிலரது ஜன்னலில்
தெரிவதில்லை.

சிலர் ஒன்றுக்குப் போனால் கூட
இரண்டு பேர் எழுந்து வழிவிட வேண்டும்.

சிலரால் தூங்க முடிகிறது.
சிலர் புத்தகங்களில் மூழ்கிப் போகிறார்.
சிலர் படம் பார்க்கிறார்.

ஒரே விமானத்துக்குள்
ஓராயிரம் தனிப்பட்ட பயணங்கள்.

ஒரே கட்டிலில் தூங்கியபோதும்
இருவருக்கும் வேறு வேறு கனவு.
வேறு வேறு வாழ்க்கை.

நீர்ச்சறுக்கு

காற்றடைத்த பையில் ஏறி அமர்ந்தேன்.
தயாராவதற்குள் வழுக்கி இறங்கியது.

சுற்றிலும் மூடிய சறுக்கல்.
ஒரே கும்மிருட்டு.
கடந்த பின்பே உணர்ந்துகொண்ட திருப்பங்கள்.
நிர்ணயிக்கப்பட்ட பாதையில்
படுவேகமாய்ப் பயணமானேன்.

ஏதோ வெளிச்சம் போல் தெரிந்தது.
கண்கொண்டு காணுமுன்
தொப்பென்று விழுந்தேன்.

என்னைச் சுமந்த பை நீரில் மிதந்தது.
மென்தென்றல் வீசியது.
பரந்த ஆகாயம் வெறித்துப் பார்த்தது.

தணியாத வேட்கை உந்தித்தள்ள
வேறொரு பையுடன் கிளம்பினேன்.
மீண்டும் ஒரு முறை!

காடு மலை எல்லாம் தேடிட்டேன்

"காடு மலை எல்லாம் தேடிட்டேன், ஒரு தங்கமான டீ ருசிக்காக" என்ற வசனம் எத்தனை பேருக்கு இன்னும் ஞாபகம் இருக்குன்னு தெரியலை.  ஒவ்வொரு இண்டர்நெட் கனெக்ஷனாக மாறி இன்று வரையில் எதிலுமே நிம்மதி இல்லாத எனக்கு அடிக்கடி அந்த வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

நான் இருப்பது ஹைதராபாத்.  இது வரை முயற்சி செய்து மண்ணைக் கவ்விய திருப்தியடையாதவை இவை:

சிஃபி.  256kbps தான் அதிகபட்ச வேகம்.  யூடியூப் வீடியோவெல்லாம் பார்ப்பதற்கு சாமியார் அளவுக்குப் பொறுமையும் நேரமும் வேண்டும்.பி.எஸ்.என்.எல். விலை கொஞ்சம் அதிகம் என்றாலும், நல்லாத் தான் இருக்கும்.  திடீர் திடீர்னு ஒரு அஞ்சு நிமிஷம் சம்பந்தமே இல்லாம கனெக்ஷன் கட் ஆகுறதை மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்.டாடா நொண்டிகாம்.  சீ, இண்டிகாம்.  ஊர்ல யாரும் இண்டர்நெட் யூஸ் பண்ணலேன்னா உங்களுக்கு நல்லா இருக்கும்.  என்னது, சாயங்காலம் ஏழு மணிக்கு இண்டர்நெட் யூஸ் பண்ணுவீங்களா?  அடப்போங்க சார்.  ஒரு பத்தரை மணிக்கு மேல ட்ரை பண்ணிப் பாக்குறது!ரிலையன்ஸ் நெட்கனெக்ட்+.  இன்னைக்குத்தான் வேலை பாக்க ஆரம்பிச்சிருக்கு.  3Mbps-ல வேலை பாக்குறதைப் பாத்து கண்ணீர் மல்க VPN-ல கனெக்ட் பண்ணி வ…