இடுகைகள்

ஆகஸ்ட், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காட்டுமலர்

முதல் முதலில் அவளைப் பார்க்கையில் "அழகாய் இருக்கிறாள்" என்று தோன்றியதே தவிர வேறொன்றும் பெரிதாய்த் தோன்றவில்லை. அவள் அழகு தான், ஆனாலும் முதல் பார்வையிலேயே மனதில் ஒட்டிக்கொண்டு நீங்க மறுக்கும் பேரழகில்லை. அப்போது அப்படித்தான் தோன்றியது. நாட்கள் செல்லச் செல்ல அவளோடு நேரம் செலவழிக்கத் தொடங்கினேன். அவள் மேலும் மேலும் அழகாகத் தெரிந்தாள். இரவு தூங்குமுன்பும் காலையில் அரைத்தூக்கக் கனவிலும் அவளையே நினைத்துக் கிடந்தேன். அந்த முகம், அந்த சிரிப்பு, அவளது குரல் -- எல்லாமே என்னை ஒரு மயக்கத்தில் வைத்திருந்தன. எல்லா வழிகளையும் பயன்படுத்தி அவளை பார்க்கவும் பேசவும் செய்தேன். நெருங்க நெருங்கத்தான் தூரம் தெரியும். ரொம்பவும் நெருங்கினால் எதுவுமே தெரியாது. அவளைப் பற்றி எனக்குப் புரியப்புரிய மனம் கசப்பே அடைந்தது. அவள் செல்லும் பாதை என் பாதையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எனக்கும் அவளுக்கும் எதுவுமே பொதுவாக இல்லை. ஆனாலும் நானிருந்த மனநிலையில் எதையும் சட்டை செய்வதாயில்லை என் மனம். கனவிலேயே வாழ்ந்தேன். எப்பேர்ப்பட்ட கனவாயிருந்தாலும் விழித்தே ஆக வேண்டுமல்லவா? நிஜம் வெயிலாய் மனதை சுட்டதில