இடுகைகள்

மே, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பட்டினத்தாரும் பஞ்சகால எறும்பும்

காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வாராதே பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்று அப்போதே எதனைக் கொண்டு நாம் வந்தோம் எதனைக் கொண்டு போகின்றோம் ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே. இளையராஜா ராகம் போட்டுப் பாடும்போது கேட்க இதமாத் தான் இருக்கு.  சொல்ற வார்த்தைகள்ல அர்த்தம் இருக்குற மாதிரியும் படத்தான் செய்யுது.  “எனக்கு அதுதான் வேணும்”னு அடம்பிடிக்கிற மனசுமேலே லேசாக் கோபமும் வருது.  இருக்கிறதை வச்சுகிட்டு நிம்மதியா இருக்கப் பழகணும்னு நிஜமாவே மனசுக்குள்ள தோனுது. ஆனா ஒரு விஷயம் திடீர்னு நினைவுல வந்து நம்மையே பாத்து சிரிக்கவும்தான் செய்யுது.  அதுவேணும் இதுவேணும்னு ஆசைப்படுற மனசு ஓடுன்னும் இருக்கிறதைக் கொண்டு வாழத் தெரிஞ்ச மனசு பொன்னுன்னும் தானே நினைக்கிறோம்?  அப்போ என்கிட்ட இருக்கிற ஓட்டு மனசு எனக்கு வேண்டாம், அதைவிட ஒசத்தியான பொன் மனசைத் தேடிப் போகப் போறேன்னு மனசு சொல்லுது.  அதையும் ஆசையைத் துறக்கப் போற துறவி மாதிரி வேஷம் போட்டுகிட்டுச் சொல்லுது.  அந்த வேஷத்தை நம்புற நாமதான் நித்யானந்தா பாவின்னு கூச்சலும் போட்டுக்கிறோம்.  ஓட்டையும் பொன்னையும் ஒன்னாப் பாக்குற மனசு வேணும்னா நித்யானந்த

மிச்சம்

தொண்டை வரை வந்தும்சொல்லாமல் போன வார்த்தைகள். பாதி எழுதியபின் அனுப்ப மனமில்லாமல் கிழித்தெறிந்த கடிதங்கள். கடையில் பார்த்து, பிடித்து, ஆனாலும் உனக்காக வாங்காத பரிசுகள். தினமும் வந்து போகும் நினைவுகளைத் தவிர்த்தால், உனக்கும் எனக்குமான உறவில் இவைதான் மிச்சம் இப்போது.

அரவான்

‘வெயில்’ மாதிரியே அரைவேக்காட்டுத் தனமான ஒரு வசந்தபாலன் படம்.  அதற்கு மேல் எதுவும் சொல்லிப் பிரயோஜனமில்லை. பி.கு: விவேக் காயாமொழியின் கருத்துடன் உடன்படுகிறேன்.

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

வைரமுத்துவின் ‘பாற்கடல்’ வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  புத்தகத்தின் முன்னுரை வாசிக்கையில் தோன்றியது “காலையில் நாஞ்சில் நாடன் வாசித்து முடித்த கையோடு மதியம் வைரமுத்துவை வாசிக்கத் தொடங்குவது நல்ல யோசனையில்லை” என்பது தான் :-)  இருந்தாலும் புத்தகத்தில் சில நல்ல பகுதிகள் இல்லாமல் இல்லை. பாற்கடல், குமுதத்தில் வெளியான கேள்வி-பதில் தொகுதி.  பல கேள்வி-பதில்கள் என்னைக் கவர்ந்தன.  ஒருசிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கே: வாழ்க்கை என்பது? ப: கல்யாணத்திற்கும் இழவுக்கும் ஆள்சேர்க்கும் போராட்டம். கே: தமிழ்த் திரைப்படங்களில் நீங்கள் அதிகம் கேட்ட வசனம்? ப: “நீங்க பேசுனதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்.” கே: யாரோடு பேசினால் அனுபவம் கிடைக்கும்? ப: ஓய்வுபெற்ற நீதிபதிகள்; காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவல்துறை அதிகாரிகள்; அரைவயதில் களமிழந்த அரசியல்வாதிகள்; நட்சத்திரங்களின் ஒப்பனைக் கலைஞர்கள்; கட்டிய வீட்டில் திண்ணைக்கு எறியப்பட்ட கிழவன்; மூத்த சவரத் தொழிலாளி; விதவைகளின் மாமியார் மற்றும் விலைமகளின் தாயார்.