இடுகைகள்

ஜூன், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொள்கை

சுவர்களைக் காட்டிலும் கதவுகள் பயனுள்ளவை. ஆயினும் சந்தர்ப்பவாதம் தப்பென்றே சாதிப்போம். நம் கொள்கை அப்படி. சுவரில் சிறுநீர் கழிக்கலாம். காதலி பெயரைக் கிறுக்கலாம். போஸ்டர் ஒட்டலாம். ஸ்டம்ப் வரைந்து கிரிக்கெட் விளையாடலாம். சிகரெட் அணைக்கலாம். கதவிற்குக் காவலாள் போட வேண்டும். முடியாதெனில் பூட்டேனும் வாங்க வேண்டும். வேறு வேறு கதவை வேறு வேறு மாதிரி பூட்ட வேண்டும் திறக்க வேண்டும். எவனும் எட்டிப் பார்க்கிறானா என்று பார்க்க வேண்டும். நாமும் எட்டிப் பார்க்கலாம் தான் - ஆனால் கொள்கை இடம் கொடுக்குமா தெரியவில்லை.

முகவரி

கடிகாரம் - முட்கள், நதி - நீர், இரத்தம் - நான். முகவரியற்றது முகவரி பெறும் கணம் முகவரியுடையது பொருளிழக்கும்.

சுகந்தம்

என்னைப் போலவே இன்னும் நூறு பேர் இதே மரத்தில் இருந்தாலும் என் வாசனை தனிப்பட்டது. தனித்துவத்தின் காரணம் எந்தெந்த விதை, எந்தெந்த வேர், எந்தெந்த நீர், எந்தெந்த மண்? விடை சொல்வது யார்?

கடமை

தன் நாற்றம் பொறுக்காது வேலை நிறுத்தம் செய்த சாக்கடை இன்னும் அதிகமாய் வெறுக்கப்பட்டது.