உறவுகள்
ஜெயமோகன் எழுதுகிறார்: "உறவுகள் என்பவை எங்கோ ஏதோ ஒரு புள்ளியில் முறிய வேண்டியவை, முறியாமல் தடுக்க முடியாதவை. இது குரூரமானதாக இருக்கலாம். ஆனால் உண்மை. எண்பது தொண்ணூறுக்கு மேல் வயதானவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் உறவுகளை விட்டு விலகிக்கொண்டே இருந்திருப்பதைச் சொல்வார்கள். பின்னுக்கு சென்று கொண்டே இருப்ப்வையே உறவுகள் நட்புகள்.ஒரு தவிர்க்க முடியாத தன்மையை கடைசியில் சென்றடைகிறோம். "உறவுகள் பல வகையில் முறிகின்றன. பலவகைகளில் தேய்ந்தழிகின்றன. பலவகைகளில் காணாமல் போகின்றன. உறவுகள் முறிவதற்கான காரணங்களை நாம் பலவகைகளில் கற்பனைசெய்து கொள்கிறோம். நம் தவறு, பிறர் தவறு, சூழல், என்றெல்லாம். உண்மையில் அப்படி அல்ல. உறவுகள் காலத்தில் ஓடும் நீரில் மிதக்கும் சருகுகள் போலச் செல்கின்றன. சருகுகள் விலகுவதும் நெருங்குவதும் அவற்றின் கையில் இல்லை." மூலம்: பின் தூறல்:கடிதங்கள்