பாண்டவர் பூமி
நான் பத்தாவது படித்துக்கொண்டிருக்கும்போது பாண்டவர் பூமி படம் வந்தது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன். என் அண்ணனுடைய நண்பர் ஒருவர் “அந்தப் படமெல்லாம் பார்ப்பியா நீ?” என்று நக்கலாகக் கேட்டது இன்னும் நினைவிலிருக்கிறது. படம் முடிந்தபின் “அப்படியொன்றும் மோசமான படம் இல்லை” என்றுதான் தோன்றியது. ஆனால் கொஞ்சம் நாள் ஆக ஆக அதிலிருந்த ஒரு விஷயம் மட்டும் மனதில் ஆழமாக நின்றுவிட்டது. “ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் விஷயங்களுக்கு தனிப்பட்ட நியாய தர்மங்கள் இருக்கும். பொதுவான நியாய தர்மங்களை ஒரு குடும்பத்துக்குள் கொண்டுவரக்கூடாது. வெளிநபர்களால் ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட நியாயங்களைப் புரிந்துகொள்ளவும் முடியாது” என்பதுதான் அது. அந்தப்படத்தில் இப்போது நினைவிலிருப்பதும் அநேகமாக இந்த ஒரு விஷயம்தான். ஒரு ஆர்வத்தில் YouTube-ல் தேடிப்பிடித்து பாண்டவர் பூமியைப் பார்க்க ஆரம்பித்தேன். முதல் பத்து நிமிடம் தாண்டுவதற்குள்ளேயே இந்தப் படத்தை நிச்சயம் பார்க்கத்தான் வேண்டுமா என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. முன்பெல்லாம் கிட்டத்தட்ட சேரனின் எல்லாப் படங்களுமே பிடி...