இடுகைகள்

மார்ச், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி, கண்ணம்மா

ஏற்கெனவே பலமுறை கேட்ட பாடல்தான். என் அண்ணன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது பாரதியார் மீதும் அவர் பாடல்களின் மீதும் அவனுக்கு ஆர்வம் மிகுந்தது. அப்போது அவன் பதிந்த ஒரு பாரதியார் பாடல் கேசட்டில் தான் இந்தப் பாடலை முதன்முதலாகக் கேட்டேன். இன்றுவரை இதன்மீது அத்தனை பெரிய அபிப்ராயம் இருக்கவில்லை எனக்கு. இன்று தற்செயலாக இதை YouTube-ல் பார்த்து வியக்கிறேன். அமலாவின் நடனம், பாரதியின் வரிகள், இசை (எம் எஸ் விஸ்வநாதன்), ஜேசுதாஸின் குரல் -- அத்தனையும் சேர்ந்து இந்தப் பாடலே ஒரு அற்புதமான அனுபவமாகிறது.