இடுகைகள்

நவம்பர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேய்பிறை

'சிலநாள் இன்பம் சிலநாள் துன்பம் என்பதாய் மனித வாழ்க்கை ஏனுள்ளது குருவே?'

வானத்தை அண்ணாந்து பார்த்தார் குரு.  நிலவைப் பார்த்தவாறே சொன்னார்.  'முழு நிலவு எத்தனை அழகாய் இருக்கிறது!'

'ஆனால் நேற்றல்லவா பௌர்ணமி?' மனதில் நினைத்தாலும் நான் அதை வெளியில் சொல்லவில்லை.

என் முகம் நோக்கி முறுவலித்த குரு சொன்னார் 'ஆம், நேற்றுத்தான் பௌர்ணமி.  சொல் இராகவா, பௌர்ணமி இரவு முழுவதும் முழு நிலவு தெரியுமென்றா நினைக்கிறாய்?  கொஞ்சம் கொஞ்சமாய் வளந்து வரும் நிலவு ஒரே ஒரு கணத்தில் முழுநிலவாய்க் காட்சியளித்துப் பின் கொஞ்சம் கொஞ்சமாய் தேயத்தொடங்கவில்லை என்று எப்படித் தெரியும் உனக்கு?'

'அப்படியென்றால் இன்பம் துன்பம் என்பதெல்லாம் வெறும் காட்சி மயக்கங்கள் தானா?'

'ஆமென்று சொன்னால் நம்பி விடுவாயா?'

இல்லையென்பது தான் பதில்.  ஆனால் மௌனமாய் தலை கவிழ்ந்தேன்.

'வளர்வதெல்லாம் தேயுமென்றும் தேய்வதென்பதே மீண்டும் வளர்வதற்காகத்தான் என்றும் ஒரு சாரார் நம்புகிறார்கள்.'

'ஆனால் எந்நாளும் மாறாமல் இருக்கும் கதிரவனும் கடலும் மலைகளும் இருக்கும் பிரபஞ்சத்தில் தானே மறைந்து வளரும் …

கவிதைக்குப் பொய்யழகு

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

எதிலிருந்தெல்லாம் விலகியிருக்கிறோமோ அவற்றாலெல்லாம் நாம் துன்பப் படுவதில்லை.  எவ்வளவோ நாளுக்கு முன் கேள்விப்பட்ட குறள்.  இருமை என்பது நாம் பார்க்கும், கேட்கும், உணரும், எண்ணும் அனைத்தின் இயல்பு என்பதை அறியாத நாளில் "சாமியாராய்ப் போய் விட்டால் துன்பப்பட மாட்டாய்" என்று இந்தக் குறள் சொல்வதாக நினைத்துக் கொண்டேன்.  இப்போது இந்தக் குறளை நினைக்கும்போதெல்லாம் மனதில் தோன்றுவது இந்தக்குறள் ஒருபாதி உண்மையை மட்டுமே சொல்கிறது என்பது தான்.

எவற்றிலிருந்து நாம் நீங்கியிருக்கிறோமோ, அவற்றின் மூலம் நாம் துன்பப்படுவதில்லை என்பது என்னவோ உண்மைதான்.  ஆனால் அவற்றின் மூலம் கிடைக்கும் இன்பமும் நமக்குக் கிடைக்காது என்பதையும் நாம் மறக்கக் கூடாது அல்லவா?

ஒரு இலக்கியத்தின் ஆசிரியரின் கருத்தை நாம் தவறென நினைக்கும்போது, அதை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.  "வள்ளுவர் இந்தக் குறளில் அவருக்குத் தெரிந்த அறுதி உண்மையைச் சொல்லி விட்டார், அவரை விட எனக்கு அதிகம் தெரியும்" என்று நான் நினைக்கலாம்.  மாறாக, வள்ளுவர் வேண்டுமென்றே பாதி உண்மையை எழுதி வைத்தார் என்…

கவிஞன்

கவிஞன் என்பவன் கவிதையை எழுதுபவன் அல்லன்.  அதை முதன்முதலில் வாசிப்பவன்.  வாசித்து அதை மானிட மொழியில் மொழிபெயர்ப்பவன்.

அடுத்து எந்த மேகமோ?

அடியிலும் முன்னும் பின்னும்
காற்றுப்போகா இடைவெளியில்
ஆயிரம் கோடிப்பேர் என்னையும் சேர்த்து.

என் முன்னிருந்தவனை நான் தள்ள
அவன் முன்னிருந்தவனை அவன் தள்ளினான்.
என்னைத் தள்ளுபவனுக்காவது தெரியுமா
எங்கே தான் போகிறோமென்று?

ஏன் திடீரென்று இப்படிக் கத்துகிறார்கள்?
இந்தப் பள்ளத்தில் ஏன் குதிக்க வேண்டும்?
யோசித்து முடிக்குமுன் அருவியாய்ப் பொழிந்தேன்.
அப்படி எங்கே தான் போகிறோம்?

ஒரு உலர்ந்த பாறையில் தெறித்து வழிந்தேன்.
அர்த்தமின்றி ஓடிய அத்தனை பேரையும் பார்த்தேன்.
வெயில் சுடத்தொடங்கியது.  ஐயோ மறுபடியுமா?