தனித்தமிழில் பேசுவது மற்றும் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. வாழ்க்கையின் மிக முக்கியமான செயல்பாடாக நாம் கற்றலைக் கொண்டுள்ளோம். கற்றல் என்பது வெறுமே புத்தகங்களை வாசிப்பதில் மட்டும் இல்லை என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். நண்பருடன் பேசும் போதும், சினிமா பார்க்கும் போதும், நம் கம்பெனியில் இருக்கும் அர்த்தமில்லா நடைமுறைகளையும் விதிமுறைகளையும் எண்ணி வியக்கும் போதும், ட்ராஃபிக்கில் குறுக்கே வருபவனைத் திட்டும் போதும், இன்னும் பலப்பல அன்றாடக் காரியங்களின் போதும் நாம் கற்றுக் கொள்கிறோம். நம்முடைய கற்றலானது நம்முடைய மேல்மட்ட மனது, அறிவுக்கு வராமல்/தெரியாமல் போகலாம்; ஆனால் நாள் முழுவதும் நாம் கற்றுக்கொண்டே தான் இருக்கிறோம். கற்றலுக்கு நாம் பயன்படுத்துவது பல மொழிகள். முக்கியமாக தமிழும் ஆங்கிலமும். கற்ற மொழியிலே சிந்திப்பதும், நம்மை வெளிப்படுத்திக் கொள்வதும் பல நேரங்களி்ல் எளிதாக இருக்கிறது. வேலை/உணவுக்காக ஆங்கிலம் படிப்போம், ஆங்கிலத்தில் சிந்திப்போம், ஆனால் ஆங்கிலத்தில் பேசுவதையும் எழுதுவதையும் தவிர்க்கச் சொல்லிப் பிரச்சாரம் செய்வோம் என்பது எனக்கு ரொம்ப அந்நியமாகவே படுகிறது. பல ஆங்கில வா...