இடுகைகள்

செப்டம்பர், 2006 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நட்பின் மரணம்

சில மாதங்களுக்கு முன் Capote என்ற ஆங்கிலப் படத்தைப் பார்த்தேன். என்னை மிகவும் பாதித்த திரைப்படங்களில் அதுவும் ஒன்று. ஓஷோவின் ஒரு புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. "சிலவற்றைப் பார்க்கையில் அழகாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் உங்களுக்குள் இருக்கும் மற்றொரு அழகான விஷயத்தை அது ஒத்திருக்கிறது" என்று சொல்கிறார் ஓஷோ. அதுபோலத்தான் திரைப்படமும் இலக்கியமும் போலும். Capote படத்தில் ஒரு காட்சியில், பெரி (Perry, மரணதண்டனைக் கைதி) படத்தின் நாயகனான கபோடியிடம் கூறுவான், "You pretended to be my friend" என்று. அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியவில்லை. வாழ்க்கையில் நம்மை பாதிக்கும் ஓரிரு காட்சி/நிகழ்ச்சிகளை மட்டும் மனம் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்கிறது. அந்த காட்சியும் எனக்கு அப்படித்தான். ஒரு கதாபாத்திரத்தின் நிலையில் நிஜ வாழ்க்கையில் நாமும் எப்போதேனும் இருந்திருந்தால், அந்தக் காட்சி, வசனங்களால் மனதில் ஏற்படும் பாதிப்புகளை என்னால் வார்த்தையில் வெளிப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு முறை அதை நினைக்கும் போதும், நானும் அதே வார்த்தைகளைச் சொல்கிறேன்