கவிதையும் உரைகளும்
உரைகள் (பதவுரை, பொழிப்புரை) என்பவை எல்லாம் கவிதையின் பொருளுக்குச் செல்லும் பாதைகளாக/ஏணிகளாக மட்டுமே இருக்க முடியும். கவிதையின் வார்த்தைகள் அனைத்தும் சேர்ந்து கூறாததை, கூற முடியாததை பேசுவதே கவிதை. மொழியின் நடை அல்ல, நடனமே கவிதை. பொருளுரைகள் நடக்க மாட்டாதவனுக்கான ஊன்றுகோல்கள். ஊன்றுகோல்களுடன் யாரும் நடனமாட முடியாது.