அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்

இரண்டு வாரங்களுக்கு முன் சிட்னியில் டார்லிங் ஹார்பரில் வெட்டியாய் உட்கார்ந்திருந்தேன்.  சுற்றுலாப் பயணிகள் நிறைந்த அந்த இடத்தில் வெறுமனே உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது ஒரு விதமான அனுபவம்.  அப்போது ஒரு பறவை எங்கிருந்தோ பறந்து வந்து எனக்கு அருகில், கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் தூரத்தில் அமர்ந்தது.  ஆள் நடமாட்டம் கொஞ்சம் கம்மியாய் இருந்த அந்த இடத்தில் அது ஓய்வெடுக்கத் தொடங்கி விட்டது.  அவ்வப்போது யாரேனும் அருகில் வந்தால் மட்டும் விலகி நகர்ந்து கொண்டது.

அப்படி நகரும்போது தான் கவனித்தேன் அந்தப் பறவையின் கால்கள் பெரிதாக சேதமடைந்திருப்பதை.  நடப்பதே கொஞ்சம் கஷ்டப்பட்டுத் தான் நடந்தது.  ஒரு ஊனமுற்ற பறவையை நான் பார்ப்பது இது முதல் தடவையல்ல.  ஒவ்வொரு முறையும் என் மனதில் தோன்றுவது இது தான்.  அந்த ஊனத்தை "ஐந்தறிவு" ஜீவிகள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.  ஊனமேதும் இல்லாத மற்ற பறவைகளின் அதே வாழ்க்கையைத் தான் ஊனமுற்ற இந்தப் பறவைகளும் வாழ்கின்றன.  ஆனால் ஊனமுற்ற மனிதன் என்றால் மட்டும் நாம் எத்தனையோ விதமான வேறுபாடு காட்டுகிறோம்.  நாம் காட்டும் வேறுபாட்டால் பலர் தங்களைத் தாங்களே இரண்டாம் தரமானவர்கள் போல் நடத்தவும் தொடங்கி விடுகிறார்கள்.

Break the Silence குறும்படத்தைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியதும் அதுதான்.  ஊனமுற்றவர் தன் வாழ்க்கையே முடிந்து போனதாய் மூலையில் உட்கார்ந்து விடுவதும் காதலர் அவருக்கு "வாழ்க்கை கொடுப்பதும்" பார்ப்பதற்கு அவ்வளவு சுகமானதாய் இல்லை.  இந்த மாதிரிப் படங்கள் மூலம் நாம் என்ன சொல்கிறோம்?  ஊனம் என்றால் குறை என்றா?  ஒரு விபத்தில் நிரந்தர ஊனமான என் நண்பனொருவன் தன்னுடைய முழு வாழ்க்கையையும் மாற்றிக் கொண்டு வாழ்கிறான்.  நம் கண்ணில் எப்போதுமே அவனது செயற்கைக்கால் மட்டும் தான் முதலில் படவேண்டுமா?  அந்தப் பறவைகளைப் போல் யதார்த்தமான ஒரு வாழ்க்கையை ஏன் நாம் வாழவில்லை?

கருத்துகள்

  1. அதானே.. வாடிய பயிர கண்டபோதெல்லாம் எதுக்கு வாடனும்றேன்.. :-)
    BTW, அந்த குறும்படத்த நான் ஏற்கனவே பாத்துருக்கேன்.. ஏதோ அவேர்னஸ் மெசேஜ் சொல்றேன்னு மொக்க போடுவானுங்க.. இவனுங்களதான் மொதல்ல வாட வைக்கணும்..

    பதிலளிநீக்கு
  2. பரந்த மனசோட சிந்திக்க முடியாதவன் தான் ..என்னைப் பொருத்த வரையிலும் ஊனமுற்றவன். அந்த வகையில் அவர்கள் எப்போதுமே வாடிய பயிர் தான்.

    பதிலளிநீக்கு
  3. அமர், நான் கொஞ்ச நாள் ஊனமாக இல்லாமல் இருந்திருந்தால் என்னுடைய பார்வை வேறானதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வாடிய பயிர் - நீரின்றி வாடிய பயிர்/ பசியுள்ள உயிர்.
    வள்ளலார் அதைத் தான் பாடி இருப்பார்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்