இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதீத ஒத்திகை (overrehearsal)

இயற்கையிலே சிலருக்கு உணர்திறன் அதிகம். இவர்களை Highly Sensitive Persons என்று அழைக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் எனக்கு இது தெரிய வந்ததிலிருந்து இது பற்றிக் கற்று வருகிறேன். நானும் ஒரு அதியுணர் நபர் (highly sensitive person-கு எனக்குத் தெரிந்த தமிழ்; இதை விட நல்ல மொழிபெயர்ப்பு இருந்தால் சொல்லுங்கள்). இந்த அதியுணர் திறனால் எனக்கு வரும் பிரச்சனைகளைத் தீர்ப்பது பற்றி ஆரம்பத்தில் கற்று வந்தேன். இப்போது அதியுணர் குழந்தைகளை (highly sensitive children) எப்படி வளர்ப்பது என்பதைக் கொஞ்சம் கொஞ்சம் கற்று வருகிறேன்.

The Highly Sensitive Child புத்தகத்தில் வந்த அறிவுரை இது. உங்களுடைய அதியுணர் குழந்தை புதிய சூழ்நிலைகளில் மற்ற குழந்தைகளைப் போல் செயல்பட முடியாமல் போகலாம். போதுமான திறமை இருந்த போதிலும், புதிய சூழலால் திணறிப்போகும் அதியுணர் குழந்தைகளுக்கு செயல்படும் ஆற்றல் குறைந்து போகிறது. புதிய சூழலின் ஆதிக்கத்தை நம்மால் குறைக்க முடியாது, ஆனால் செய்ய வேண்டிய செயலை நம் அதியுணர் குழந்தை கண்ணை மூடிக்கொண்டு செய்யக்கூடிய அளவுக்கு ஒத்திகை பார்த்தால் மற்ற குழந்தைகள் அளவுக்கு நம் குழந்தைகளும் செயல்பட முடி…