தெய்வம் விட்டுப் போவதில்லே
தர்மதுரை ஆணென்ன பெண்ணென்ன பாடலில் வரும் வரி இது: “தேடும் பணம் ஓடிவிடும் தெய்வம் விட்டுப் போவதில்லே”. கேட்க நன்றாகவே இருந்தாலும், குறை காணா விட்டால் நமக்குத் தூக்கம் வருவதில்லை.
-----
ஒருவர் தனக்குத் தெரிந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தார். “கையில கிடைக்கிற பணத்தை எல்லாம் உடனே தங்கமா மாத்திருவேன் நான். கிராம் 240 ரூபாய் விக்கும் போது வாங்க ஆரம்பிச்சேன். அப்போவே அடேயப்பா இந்த விலையா தங்கம்னு மலைப்பா தான் இருந்துச்சு. இப்ப விக்கிற விலையை அந்தக் காலம் யாரும் நெனச்சுக்கூட பாக்கலை.”
அடுத்தவர் சொன்னார். “நான் நிலமாத்தான் வாங்கிப் போடுறது. முதல் சேர்த்து வாங்குறது கொஞ்சம் கஷ்டம், ஆனா காலாகாலத்துக்கும் நம்ம பேர்ல இருக்கும். அழுகிப்போற சமாச்சாரமா... தங்கம் கூட உங்களுக்கு நகையில போடப்போட மதிப்பு குறையும், ஆனா நிலம் எப்படிப் போனாலும் மதிப்பு ஏறிக்கிட்டேதான் போகுமே தவிர இறங்காது.”
“நானும் கொஞ்சம் நிலம் வாங்குனேன், ஆனா தங்கம்னா வாங்குறதும் ஈஸி, சின்ன மதிப்புல கொஞ்சம் புரட்டுறதுக்கு எடுக்குறதும் ஈஸி. பத்திரம், வில்லங்கம், அந்த மண்டையடியே வேண்டாம்னு ஒதுங்கிட்டேன்.”
-----
இந்த ரெண்டு பேரோட வாதத்துக்கும் பணத்தை விட சாமி தான் எப்பவுமே கூட இருக்கும்னு அந்தப் பாட்டுல சொல்ற வாதத்துக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

கருத்துகள்
கருத்துரையிடுக