இடுகைகள்

மார்ச், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விசும்பு

ஐம்பூதங்களில் ஒன்றாக ஆகாயத்தையும் நினைத்து வந்தேன்.  ஜெயமோகன் மறுபிறப்பு பற்றிய ஒரு கேள்விக்கு அளிக்கும் பதிலில் இவ்வாறு சொல்கிறார்: ஐம்பெரும்பூதங்களால் [நிலம்,நீர்,எரி,வளி,விசும்பு] ஆனது இந்த உடல்.  மரணத்தில்  ஒவ்வொன்றும் அந்தந்த பூதத்தில் கலக்கின்றன. உயிர் ஐந்தாவது பூதமாகிய  விசும்பில் அல்லது சூனியப்பெருவெளியில் கலந்து விடுகிறது. ஐந்தாவது பூதம் ஆகாயம்.  வானம் அல்ல... அது விசும்பு -- இந்தப் பிரபஞ்சத்தின் பரந்த வெளி.  நாம் கண்ணால் காணும் ஆகாயத்தைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு, பல லட்சம் மடங்கு பெரியது!

பேச்சுப்போட்டி

சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது சில பேச்சுப் போட்டிகளில் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.  "பேச்சுப்போட்டின்னா என்ன?" என்று நான் கேட்டதற்கு, "ஒரு தலைப்பு கொடுப்பாங்க, அதைப் பத்தி மேடையில பேசணும்" என்று மட்டும் சொன்னார்கள். போட்டியில் பங்குகொள்ள முதலில் பெயர் கொடுத்த பின்புதான் அதை எனக்குச் சொல்லிக்கொடுத்தார்கள்.  இரண்டிலிருந்து மூன்று பக்கம் வரை இருக்கும் நீளமான கட்டுரையை மனப்பாடம் செய்து மேடையில் ஒப்புவிக்க வேண்டும்.  அப்படித்தான் எனக்குப் புரிந்தது அப்போது.  பேச்சுப்போட்டிகளில் வரிசையாகப் பங்குகொண்டு, மீண்டும் மீண்டும் தோற்கும்போது கூட எனக்குத் தெரியவில்லை, ஒப்புவிப்பது அல்ல போட்டி என்று. இதெல்லாம் முடிந்து வருடங்கள் ஆன பிறகுதான் தெரிய வந்தது பேச்சுப்போட்டி என்பது சொற்பொழிவுப் போட்டி என்று.  யாரேனும் ஒருத்தர் என்னுடைய சின்ன வயதிலேயே என்னிடம் சொல்லியிருக்கலாம் -- இளம்பிறை மணிமாறன் மாதிரிப் பேசுவதுதான் போட்டியே அன்றி மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது அல்ல என்று.

இன்று முதல்

பதினோரு மணிக்கு முகூர்த்தம். பத்தரைக்கு மண்டபத்தில் இருந்தேன். அளவுக்கு மீறிய அலங்காரத்தில் உன்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை. இருட்டில் 3:32 என மணி சொல்லும் பச்சை நிற ஒளியை வெறித்தவாறு மீண்டும் அதே கேள்வியை நினைக்கிறேன். உனக்கும் எனக்கும் இடையில் என்ன உறவு இனி?