சார்பு
ஒரு கொடியில் வளரும் புழு அக்கொடியின் இலைகளையே தின்று உயிர் வளர்க்கிறது. அந்தக் கொடிக்கோ அருகிலுள்ள மரத்தின் மேல் படராவிடில் வாழ்க்கையில்லை. கொடியைச் சுமந்து கொண்டிருக்கும் மரம் மட்டுமென்ன, மண் இல்லாமல் நின்று விடுமா, இல்லை மழை இல்லாமல் வளர்ந்திடுமா? எல்லாரையும் தாங்கி நிற்கும் பூமி சூரியனும் நிலவும் இல்லாமல் இருந்திடுமா? நடுக்கும் குளிரையும் எரிக்கும் வெயிலையும் நனைக்கும் மழையையும் நன்றியுடன் பார்க்க முடிந்தால் பார்ப்போம். அதன்றி வெறுப்புதான் நமக்கு வருமென்றால் அனைத்தையும் வெறுப்புடனே பார்ப்போம். குடியா முழுகி விடும்? அப்படியே குடி முழுகிப் போனாலும் தான் என்ன?