இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காலங்கடந்து நிற்கும் அறிவுரைகள்

படம்
படத்தில் காண்பது அலுவலகத்தில் எனது பணி மேஜை. நான் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளைக் கண்ணில் படும்படி எழுதி வைத்திருக்கிறேன். ஒரு துறவி போல 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் இவ்வளவு யதார்த்தமான அறிவுரை கொடுத்திருக்கிறார் என்றால் அவர்‌ வாழ்க்கையை எவ்வளவு ஆழமாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்!

குணாவின் அபிராமி

படம்
அபிராமி அந்தாதியில் ‘நாயகி நான்முகி’ எனத் தொடங்கும் பாடல் அம்மையைப் பல பெயர்களும் சொல்லி வணங்குகிறது. தொடர்ந்து இந்தப் பாடலைப் பாராயணம் செய்தால் அம்பிகையை நேரில் பார்க்கலாமாம் . குணா திரைப்படத்தில், நாயகன் குணா நாயகி அபிராமியைத் தேடி அலைகிறான். தற்செயலாக அபிராமியை ஒரு கோவிலில் பார்க்கிறான். காணத் தேடி அலைந்தவனுக்கு அபிராமியை நேரில் பார்க்கக் கிடைக்கும் போது ஒலிக்க வேண்டிய பாடல் ‘நாயகி நான்முகி’ தானே! அந்தப் பாடலுடன் ‘பார்த்த விழி பார்த்தபடி’ என்ற திரைப்பாடல் தொடங்குகிறது. வரிசையில் பலருக்குப் பின் நிற்கும் குணா வரிசை நகர நகர அபிராமியை நெருங்கிச் செல்கிறான். முதல் முதலாக அபிராமிக்கு மிக அருகில் நின்று பார்த்து வியக்கிறான். மீண்டும் அபிராமி அந்தாதியில் இருந்து ஒரு பாடல் ஒலிக்கிறது. ‘பனி மொழி வேதப் பரிபுரையே’ என்ற இந்தப் பாடல் அம்மையின் அழகை வர்ணிக்கும் பாடல் . ரசித்து ரசித்து அவர்கள் குணா படத்தை எடுத்திருக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை படத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை வருகிறது.