இடுகைகள்

மார்ச், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பல வேடிக்கை மனிதரைப் போலே

ஒரு குத்துமதிப்பாகத்தான் நாடோடிகள் படம் பார்க்கத் திரையரங்கில் போய் உட்கார்ந்தோம்.  எந்த எதிர்பார்ப்பும் இல்லை எனக்கு.  படத்தை முழுவதுமே ரசித்துப் பார்த்த ஞாபகம் இருக்கிறது.  நகைச்சுவைக் காட்சிகளெல்லாம் ரசிக்கும்படி இருந்தன. அதே மாதிரி குத்துமதிப்பாகத்தான் போராளியும் இப்போது பார்த்தேன்.  படத்தில் பாதியிலேயே இயக்குநர் சமுத்திரக்கனியைப் பற்றி விபரம் தேடிப் பார்க்க வைக்குமளவுக்கு எனக்குப் பிடித்திருந்தது.  அவர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராய் இருந்தார் என்பதை அறிகையில் "அதானே பாத்தேன்" என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டேன் (என்னவோ பாலச்சந்தர் பத்தி எல்லாம் தெரிஞ்ச மாதிரி!).  சமுத்திரக்கனி, மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு இயக்குநர். *** ஊருக்குப் போகும் சமயங்களிலெல்லாம் படம் பார்க்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வதுண்டு.  ஆனால் திரையரங்கில் ஓடும் படங்களின் லட்சணத்தில் எந்தப் படத்தையும் போய்ப் பார்க்கத் தோன்றுவதில்லை.  (முன்பு மாதிரி நல்ல படம் எது என்று பகுத்தறியும் திறனில்லை என்பதும் ஒரு காரணம்.)  தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் காலத்துக்கேற்ப மாறி படங்களை நேரடியாக ம