இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாறிக்கொண்டே இருக்கும் உலகம்

உன் குழந்தை(கள்) வளர்ந்து வாழப்போகும் உலகம் நீ வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் உலகத்திலிருந்து மாறுபட்டது. அந்த உலகத்தின் போக்கு, நியாயங்கள் அனைத்தையும் உன்னால் புரிந்துகொள்ள முடியாது. உன்னுடைய உலகத்தின் புதியதொரு நகலை உன் குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுக்க முயன்றால் நீ தோற்றுப் போவாய்; உன் குழந்தைகள் உன்னை ஒதுக்கி தாங்களாகவே தங்கள் உலகத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை வரும். உன் குழந்தைகள் தங்கள் உலகத்திற்குள் சென்று வெற்றிபெற உதவும் பாலமாக இருப்பதா, இல்லை அவர்களைத் தடுத்து நிறுத்தும் சுவராக இருப்பதா என்பது உன் முடிவு.

புகைப்படக் கலை

படம்
கலை மனித மனத்தை உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது என்று சிறு வயதில் படித்ததுண்டு. இலக்கியம் மனித மனத்தை விரிவுபடுத்துகிறது என்பதை அனுபவத்தில் கண்டிருந்தாலும், மற்ற கலைகளால் மனம் எப்படி மேம்படுகிறது என்பது எனக்கு விளங்காமலேதான் இருந்து வந்தது. ***** முதன்முதலில் நான் அமெரிக்கா வந்தது 2006-ல். இந்தியாவை விட்டு வெளியே முதல் முதலாகக் கால் வைத்ததும் அப்போதுதான். அமெரிக்காவில் குறைந்த விலையில் கிடைக்கும் பொருள்கள் ஏதாவது வாங்கலாம் என்று தோன்றியபோது வாங்கியதுதான் என்னுடைய முதல் கேமரா. கேமரா என்றால் என்ன, எது நல்ல கேமரா, எதுவுமே தெரியாமல் குறைந்த விலை என்பதால் மட்டுமே வாங்கிய கேமரா அது. அவ்வப்போது நல்ல படங்கள் எடுக்க முயற்சி செய்தேன் என்றாலும், புகைப்படக் கலையில் அப்படியொன்றும் எனக்குப் பெரிய ஆர்வம் இருக்கவில்லை. சென்ற ஆண்டுத் தொடக்கத்தில்தான் ஒரு SLR கேமரா வாங்கினேன். SLR வாங்கியது, அதற்கு முன் நான் வைத்திருந்த கேமராவைவிட SLR கேமரா தெளிவான படங்கள் எடுக்கும் என்ற காரணத்தினால்தான். ஆனாலும் மற்றவர்கள் எடுக்கும் கலை நேர்த்தியுடைய படங்களைப் பார்க்கும்போது நாமும் இப்படிப் படங்கள் எடுக்க...