மன்மதன் அம்பு
காதலா காதலா மாதிரியான கமல் படங்களைப் பார்த்தவர்களுக்கு மன்மதன் அம்பு பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தாத படம் தான். காதலா காதலா போன்ற படங்களை ரசித்தவர்கள் மன்மதன் அம்பையும் ரசிப்பதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது. புரிந்துகொள்ள அவகாசம் கொடுக்காமல் வரிக்கு வரி நகைச்சுவையாக இருக்கும் வழக்கமான் கமல் படம். எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. இன்னும் ஒருமுறை கூட பார்க்கும் அளவுக்குப் பிடித்திருக்கிறது :-) படத்தில் எனக்குப் பிடித்திருந்த இன்னொரு விஷயம் சின்னச் சின்ன விஷயங்களில் லாஜிக் சரியாக இருந்தது. உறவுகளில் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள், பெரிய விஷயங்களில் பொய் சொல்பவர்களை நாம் எளிதில் மன்னிப்போம், ஆனால் சின்னச் சின்னப் பொய் சொல்பவர்களை நம்மால் மன்னிக்க முடியாது. அதே மாதிரி, முக்கியக் கதை கொஞ்சம் கிழிஞ்ச துணி மாதிரி இருந்தால் கூட சின்னச் சின்ன விஷயங்கள் சரியாய் இருந்ததால் எனக்கு இந்தப் படம் பிடித்திருந்தது. ஒரு உதாரணம். ஒரு கார் விபத்தில் கார் ஓட்டிக்கொண்டிருந்த ஆண் சின்ன அடியுடன் பிழைத்துக் கொள்கிறான், ஆனால் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பெண் செத்த...