இடுகைகள்

ஜனவரி, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

படையல்

படையல் புசிக்கும் தெய்வம் போல் என் கவிதைகளை வாசிக்கிறாள் அவள்.

வாழ்க்கை? -- எதிர்வினை

நண்பர் அமரின்  வாழ்க்கை? என்ற பதிவிற்கு பின்னூட்டம் எழுத ஆரம்பித்து பெரியதாக வந்ததால் இங்கே பதிப்பிக்கிறேன்.  அந்தப் பதிவையும் ஏற்கெனவே இருக்கும் பின்னூட்டங்களையும் (comments) முதலில் படித்து விடுங்கள். ( http://vettiyaa-pesu.blogspot.com/2008/07/blog-post_14.html ) " கடவுளுக்கு வரையறை கிடையாது. க்ச்டுர்ச்து க்கு எப்படி எந்த ஒரு வரையரயும் இல்லையோ, இருக்க முடியாதோ அதுபோல். " க்ச்டுர்ச்துவைப் பற்றி அதனால்தான் யாரும் பேசவில்லை.  எதைப்பற்றியெல்லாம் நம் மனம் நினைக்கிறதோ, அதற்கெல்லாம் ஒரு வரையறை இல்லாமல் இருக்க முடியாது.  வரையறையே இல்லாத ஒன்று வேண்டும் என்று தேடித்தான் க்ச்டுர்ச்துவை நீங்கள் கண்டடைந்திருப்பீர்கள்.  உங்களளவில், இதை எழுதும்போது, "க்ச்டுர்ச்து என்பது வரையறை இல்லாதது" என்ற வரையறை இருந்திருக்கும்.  கடவுளைக்கூட "வரையறைகளுக்கு அப்பாற்பட்டவன்" என்ற வரையறையோடுதான் மனிதமனத்தால் நெருங்க முடியும்.  பிரபஞ்சம் எல்லையற்றது என்று வரையறுப்பதைப் போல. இங்கே வரையறை என்பது அறிவியலில் உள்ளதுபோல முழுமையான (complete) ஒன்றாக இருக்கத் தேவையில்லை.  ஒவ்வொரு மனமும் அ

பொய்த்தேவு

நாவல் வாசிக்கும்போது அதிலிருந்து என் மனதிற்குப் பிடித்த சொற்றொடர்களைக் குறிப்பெடுத்து வைப்பது என்னுடைய வழக்கம்.  க.நா.சு எழுதிய பொய்த்தேவு நாவலை இப்போதுதான் படித்து முடித்தேன்.  க.நா.சுவின் நடையே இப்படித்தானா இல்லை இந்த நாவல் இப்படி இருக்கிறதா என்று தெரியவில்லை -- சொல்ல வரும் அனைத்தையுமே கதையிலிருந்து பிரிக்கமுடியாத, தனித்து உபயோகிக்க முடியாத வாக்கியங்களாகவே எழுதியிருக்கிறார். பொய்த்தேவு என்ற தலைப்பின் அர்த்தம் கிட்டத்தட்ட நாவலைப் படித்து முடிக்கும் தறுவாயில்தான் எனக்கு விளங்கியது.  நான் படித்த சிறந்த நாவல்களுள் இதுவும் ஒன்று என்று நிச்சயமாகச் சொல்லலாம்.  படித்து முடித்தபின், வாழ்க்கையைப் பற்றிய மலைப்பும், எனக்கான தெய்வங்கள் என்னென்ன என்ற கேள்வியும், ஒரு சிறந்த இலக்கியத்தைப் படித்த திருப்தியும், இந்தப் புரிதலுடன் மீண்டும் ஒருமுறை இந்த நாவலைப் படிக்கவேண்டும் என்ற ஆவலும் மனதில் ஓடுகின்றது. நான் இவ்வளவு தூரம் ரசித்த ஒரு நாவலிலிருந்து இரண்டே வாக்கியங்கள் தான் சேகரித்து வைத்திருக்கிறேன் என நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது.  இன்னொருமுறை வாசித்தால் இன்னும் சில நல்ல வாக்கியங்கள் கிடைக்கு

மசாலா

"மசாலா படம் எடுப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை" என்று பலர் சொன்னாலும் எனக்கு இதுவரை இயக்குநர் பேரரசு மேல் பெரிய மரியாதை இருந்ததில்லை.  வீட்டில் அம்மாவும் பெரியம்மாவும் வேறுவேறு சேனல்களில் ஓடிக்கொண்டிருந்த பல படங்களிலிருந்து 'திருப்பாச்சி'யைத் தேர்வு செய்து பார்க்க ஆரம்பித்தார்கள்.  நிச்சயமாக அது ஒரு சீரியஸ் படம் இல்லை.  தர்க்கம் செய்யும் மூளையை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால் பெரிதாக ஒன்றும் குறை சொல்ல முடியாது.  பேரரசு போன்ற இயக்குநர்களின் மேல் இனிமேலாவது கொஞ்சம் மரியாதை காட்டுவேன் என்று நினைக்கிறேன்.