மதிப்பீடு
சிலையாக மாறிப்போவதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் சிலையாக நிற்கும் மனிதன் சிலைப்படுத்தப்பட்டிருக்கும் பண்புகளிலிருந்து ஒருகாலத்தில் மாறுபட்டிருந்தான் என்பதையோ, இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருந்தால் மாறியிருக்கக்கூடும் என்பதையோ சொல்ல முடியாமல் போவதுதான். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மலர்களை வைத்தே மீதிப் பதினோரு ஆண்டுகளிலும் மதிப்பிடப்படும் குறிஞ்சிச்செடி போல மனிதர்களும் பெரும்பாலும் தவறாகவே மதிப்பிடப்படுகிறார்கள்.