இடுகைகள்

பிப்ரவரி, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இன்னமும் காணாமல் போகாதவர் பற்றிய அறிவிப்பு

ஐந்தடி நான்கு அங்குலம் நல்ல சிவப்பு மெலிந்த தேகம் அசட்டுத் தனமாய் சிரிக்கும் ஒரு புகைப்படம் கீழே முகவரியும் தொலைபேசி எண்ணும். "மணமகன் தேவை"க்கும் "காணவில்லை"க்கும் சிறிதளவு ஒற்றுமை வார்த்தையளவில் உண்டு. "போட்டோ பாத்தியா, பிடிச்சிருக்கா உனக்கு?" கேட்கும்போதுதான் தோன்றும், "காணவில்லை" எவ்வளவோ தேவலையோ என்று.