இடுகைகள்

அக்டோபர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Wedding, marriage — என்ன வித்தியாசம்?

“வர்ற 23-ம் தேதி அண்ணனுக்கு marriage. கண்டிப்பா வந்திருங்க” என்று திருமண அழைப்பிதழ் கொடுப்பது நம் ஊரில் சாதாரணம். ஆனால் marriage என்ற வார்த்தையை இவ்வாறு உபயோகிப்பது தவறு என்பது உங்களுக்குத் தெரியுமா? திருமண உறவு அல்லது சம்சாரம் என்பது கல்யாணம் ஆன நாளில் இருந்து வாழ்வு முடியும் வரை நீடிப்பது. அதுதான் marriage. அத்திருமண உறவு ஆரம்பிக்கும் விழா, கணவனும் மனைவியும் சேர்ந்து வாழத் தொடங்கும் அந்த விழா — அது wedding. ஆகவே wedding invitation என்பது சரி; marriage invitation என்பது தவறு. “வர்ற 23-ம் தேதி அண்ணனுக்கு wedding. கண்டிப்பா வந்திருங்க” என்று உறவினரை அழைப்பதே சரியானது.

வீடு திரும்புதல்

12 வருடங்களாகிறது, நான் வீட்டைவிட்டுத் தனியாகத் தங்கியிருக்க ஆரம்பித்து. முன்பெல்லாம் வாழ்க்கையில் என்னென்னவோ செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்றும் ஆசையிருக்கும். பயணம் செய்ய வேண்டும் என்பது ஒரு தீராத ஆசை. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் முடிந்த இடங்களுக்குப் போய்க்கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும் அண்டார்டிகா செல்வது, கப்பலில் நீண்ட பயணம் செய்வது, உலகிலேயே நீளமான சாலை முழுவதையும் பயணித்துக் கடப்பது போன்று பல நிறைவேறாத ஆசைகள் எப்போதும் இருந்து வருகின்றன. எவ்வளவுதான் முயற்சித்தாலும் இப்படி நிறைவேறாத சில ஆசைகள் இருக்கும் என்பது கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது. நிறைவேறாத ஆசைகள் பல இருந்தாலும் மனநிறைவுடன் வாழ முடியும் என்பதும் தெளிவாகிறது. வீட்டிலுள்ளவர்களோடு ஒரு நீண்ட சாலைப்பயணம் (roadtrip) செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. சென்ற மாதம் குடும்பத்துடன் ராஜஸ்தான் சென்றோம். நல்ல பயணம். பல நாள் கழித்து இந்திய சாலைகளில் பயணம் செய்ததும், பல நாள் கழித்து அம்மா, அப்பா, அண்ணன்கள், பெரியம்மா, குழந்தைகள் எல்லோரையும் பார்த்ததும் மகிழ்ச்சியளித்தது. என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரிப் பயணங்கள

மன்னிப்புக் கோரல்

நான் பெரும்பாலான நேரங்களில் மன்னிப்புக் கேட்பதேயில்லை. ஏனென்றால் மன்னிப்புக் கேட்பது என்பது பெரும்பாலான நேரங்களில் பிரச்சனையைப் பூசி மெழுகவே பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்துக்குச் சொல்கிறேன். எனக்கு நெருக்கமான ஒருவர் மன்னிப்புக் கேட்பது எப்போதுமே ஒரே மாதிரிதான்: “நான் செய்ததில் ஏதும் தவறிருந்தால் மன்னிக்கவும்.” கொஞ்சம் யோசித்தாலே இந்த வாக்கியத்தின் அர்த்தமின்மை விளங்கும். ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. அதில் இரண்டு பேருக்கிடையில் கருத்து வேறுபாடு. அந்த வேறுபாட்டைச் சரி செய்ய நினைப்பவர் “நான் செய்ததில் ஏதும் தவறிருந்தால் மன்னிக்கவும்” என்று சொல்லிவிட்டு, பிரச்சனையே தீர்ந்துவிட்டதாய் நினைத்துக்கொள்கிறார். இதனால் பிரச்சனைகள் அப்போதைக்கு மறக்கப்படுகின்றனவே தவிர அவை தீர்க்கப்படுவதில்லை. உண்மையில் பிரச்சனையைத் தீர்க்க விரும்பும் ஒருவர் என்ன செய்ய வேண்டும்? அந்தக் கருத்து வேறுபாடு என்ன என்பதைப் பற்றி ஆழமாக யோசிக்க வேண்டும். அதில் தனது வாதம் தவறானதே என்று தோன்றினால் அத்துடன் தன்னுடைய கருத்தை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். மன்னிப்புக் கேட்பதைவிடவும் இது முக்கியமானது ஏனென்றால் இந்த மன மாற்றம்தான