இடுகைகள்

மே, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூரண கும்பம்

“பெரியவர்கள் எழுந்தருளும்போது பூர்ணகும்பம் வைக்க வேண்டும்” என்று ஒரு சாஸ்திர விதி இருப்பதாக சடகோபன் ராமானுஜன் தன்னுடைய படமொன்றில் எழுதியிருக்கிறார். இதில் “பெரியவர்கள்” என்பவர்கள் பெரும்பாலும் இந்த மக்களின் வாழ்க்கை நலத்தை உயர்த்த ஏதேனும் செய்ய வல்லவர்களாக இருப்பார்கள். வளம் மிகுந்த ஓர் ஊருக்குப் பெரியவர் ஒருவர் வந்தால் கும்பத்தில் என்ன காண்பார்? நெய், பால் போன்ற விலையுயர்ந்த, வளத்தை வெளிக்காட்டும் திரவங்கள் கும்பங்களில் இருக்கும். அதே பெரியவர் வளம் குறைந்த ஒரு ஊருக்குப் போனால்? பெரும்பாலான கும்பங்களில் தண்ணீர் இருக்கும். தெரு வழியே செல்கையிலேயே மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இது ஒரு வழி. மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்டு அறிவதைக் காட்டிலும் எளிமையான சிறந்த வழி.