இடுகைகள்

மே, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விதிவிலக்கில்லாத விதி

இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்லே ஒன்னு ரெண்டு தப்பிப் போகும் ஒழுக்கத்திலே விதி வழி சொல்லி போட்டான் மனுஷப் புள்ள விதி விலக்கில்லாத விதியுமில்லே தல்ஸ்தோய் காலத்தில் இருந்த அதே மனநிலையில் தான் வைரமுத்து காலத்து காதலர்களும் இருக்கிறார்கள்.  ( இருக்கிறோம் என்று சொல்வதுதான் சரி என்று நினைக்கிறேன்.)

வளர்ச்சி

ஒவ்வொரு முறை காற்றடிக்கையிலும் நிறைய நிறையப் பூ உதிர்த்து காற்றெல்லாம் மணம் நிறைத்து பூவால் மண் மறைத்தது அருவிக் காலத்தில். உயிர்வாழும் ஏக்கத்தில், பூவோடு இலையெல்லாம் உதிர்த்தெறிந்து மொட்டை மரமாய் நின்றாலும் நிழல் கொஞ்சம் கொடுத்தது ஆற்றுக் காலத்தில். பூவும் பழமும் விதையுமெல்லாம் மண்ணோடு போவது அறிந்து பட்ட மரம்போல் ஆனபின்பும் என்றேனும் ஒன்றிரண்டு பூப்பூப்பது கடற் காலத்தில்.

முடிவு

அத்தனை உயிர்களும் மூழ்கி மரித்த பின்னரும் பெருகிக்கொண்டே போன வெள்ளத்தில் தற்கொலை செய்துகொண்ட பிணம் ஒன்று கூட இல்லை.

மாந்தோப்பு

முள்வேலி சூழ்ந்த தோப்பிற்குள்ளே கொத்துக் கொத்தாய்த் தொங்கும் பழங்களை மறைத்து வைக்கத் தெரியாத மாமரங்கள்.

விதையே மரம்

என் மனதில் இக்கணத்திலிருக்கும் வெறுப்பெனும் விதையை உற்று நோக்கிச் சொல்கிறேன், "பல்கிப் பெருகி வனமாய் ஆவாய்". விதையிலிருந்து விதை முளைப்பதில்லை.  வெறுப்பாகிய விதை வளர்ந்து அழிந்து விருப்பாகிய மரமாய் உருமாறும்.  விதை மரமாயும், மரம் மேலும் ஆயிரமாயிரம் விதையாயும் மாறும். "என்னிலேயே இருந்து, வனமாய் ஆவாய், என் பிரிய விதையே!"