சோடியமுகம்

காலப்பயணம் முடித்து
இப்போது தான் திரும்பினேன்.
அணுக்களைப் பார்த்தே
தீர வேண்டுமென்ற ஆசை தான்.
சோடியம் தான் கிடைத்தது.
பார்த்தேன், பல நூறு சோடியத்தை.
எல்லாமே 11 எலெக்ட்ரான் தான்.
ஆயினும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முகம்.
சாப்பிட அமர்ந்தேன்.
அத்தனை முகமும் சிரித்தது
ஒரு சோற்றுப் பருக்கையிலிருந்து.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்