சக பயணி்

ஒரே விமானம்தான் என்றாலும்
அவரவர்க்கு அவரவர் இருக்கை.

சிலருடைய ஜன்னலில்
விமானத்தின் இறக்கைகள்
தெரியும்.

சிலரது ஜன்னலில்
தெரிவதில்லை.

சிலர் ஒன்றுக்குப் போனால் கூட
இரண்டு பேர் எழுந்து வழிவிட வேண்டும்.

சிலரால் தூங்க முடிகிறது.
சிலர் புத்தகங்களில் மூழ்கிப் போகிறார்.
சிலர் படம் பார்க்கிறார்.

ஒரே விமானத்துக்குள்
ஓராயிரம் தனிப்பட்ட பயணங்கள்.

ஒரே கட்டிலில் தூங்கியபோதும்
இருவருக்கும் வேறு வேறு கனவு.
வேறு வேறு வாழ்க்கை.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

குழப்பம் leads to புலம்பல்