காடு மலை எல்லாம் தேடிட்டேன்

"காடு மலை எல்லாம் தேடிட்டேன், ஒரு தங்கமான டீ ருசிக்காக" என்ற வசனம் எத்தனை பேருக்கு இன்னும் ஞாபகம் இருக்குன்னு தெரியலை.  ஒவ்வொரு இண்டர்நெட் கனெக்ஷனாக மாறி இன்று வரையில் எதிலுமே நிம்மதி இல்லாத எனக்கு அடிக்கடி அந்த வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

நான் இருப்பது ஹைதராபாத்.  இது வரை முயற்சி செய்து மண்ணைக் கவ்விய திருப்தியடையாதவை இவை:

  • சிஃபி.  256kbps தான் அதிகபட்ச வேகம்.  யூடியூப் வீடியோவெல்லாம் பார்ப்பதற்கு சாமியார் அளவுக்குப் பொறுமையும் நேரமும் வேண்டும்.
  • பி.எஸ்.என்.எல். விலை கொஞ்சம் அதிகம் என்றாலும், நல்லாத் தான் இருக்கும்.  திடீர் திடீர்னு ஒரு அஞ்சு நிமிஷம் சம்பந்தமே இல்லாம கனெக்ஷன் கட் ஆகுறதை மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்.
  • டாடா நொண்டிகாம்.  சீ, இண்டிகாம்.  ஊர்ல யாரும் இண்டர்நெட் யூஸ் பண்ணலேன்னா உங்களுக்கு நல்லா இருக்கும்.  என்னது, சாயங்காலம் ஏழு மணிக்கு இண்டர்நெட் யூஸ் பண்ணுவீங்களா?  அடப்போங்க சார்.  ஒரு பத்தரை மணிக்கு மேல ட்ரை பண்ணிப் பாக்குறது!
  • ரிலையன்ஸ் நெட்கனெக்ட்+.  இன்னைக்குத்தான் வேலை பாக்க ஆரம்பிச்சிருக்கு.  3Mbps-ல வேலை பாக்குறதைப் பாத்து கண்ணீர் மல்க VPN-ல கனெக்ட் பண்ணி வேலை பாக்க ஆரம்பிச்ச அடுத்த நிமிஷமே High Speed 1x-னு மாறி 140kbps-க்கு மாறிக்கும்.
இவ்வளவு அனுபவம் இருக்கிறதால நானும் சொல்லலாம்.  "காடு மலை எல்லாம் தேடிட்டேன்!"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’