விபத்து

காயம் பட்டதும்
கட்டுப்போட்டுக் கொண்டதும்
அந்த ஒரு முறை மட்டும் தான்.

அன்றிலிருந்து
அவ்வழி போகையிலெல்லாம்
தடுமாறி விழுகிறேன்.

எழ முயன்று முடியாமல்
தெரு நடுவில் கிடக்கிறேன்.

அவ்வழி போகும்
ஒவ்வொரு முறையும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்