ஞாயிறு, 20 ஜூன், 2010

சுகந்தம்

என்னைப் போலவே
இன்னும் நூறு பேர்
இதே மரத்தில் இருந்தாலும்
என் வாசனை தனிப்பட்டது.

தனித்துவத்தின் காரணம்
எந்தெந்த விதை, எந்தெந்த வேர்,
எந்தெந்த நீர், எந்தெந்த மண்?
விடை சொல்வது யார்?