வளர்ச்சி

ஒவ்வொரு முறை காற்றடிக்கையிலும்
நிறைய நிறையப் பூ உதிர்த்து
காற்றெல்லாம் மணம் நிறைத்து
பூவால் மண் மறைத்தது
அருவிக் காலத்தில்.

உயிர்வாழும் ஏக்கத்தில், பூவோடு
இலையெல்லாம் உதிர்த்தெறிந்து
மொட்டை மரமாய் நின்றாலும்
நிழல் கொஞ்சம் கொடுத்தது
ஆற்றுக் காலத்தில்.

பூவும் பழமும் விதையுமெல்லாம்
மண்ணோடு போவது அறிந்து
பட்ட மரம்போல் ஆனபின்பும்
என்றேனும் ஒன்றிரண்டு பூப்பூப்பது
கடற் காலத்தில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’