கடலோடி

"மந்தையிலிருந்து பிரிந்த இரண்டு ஆடுகள் மீண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே..." என்று வடிவேலு சொன்னதும் பளார் என்று ஒரு அறை விட்டு "ஆடு எப்படிடா பேசும்?" என்று கேட்பார் கவுண்டமணி.  இந்தக் காட்சிதான் எனக்கு ஞாபகம் வந்தது எஸ் ராமகிருஷ்ணனின் கோடுகள் இல்லாத வரைபடம் என்ற புத்தகத்தில் "கடலோடி" என்ற வார்த்தையைப் படித்ததும்.  (கடல்ல எப்படிடா ஓடுவ?)

நாடு நாடாக ஓடுபவன் நாடோடி, கடல் கடலாக ஓடுபவன் கடலோடி.  கடலோடி என்ற வார்த்தையை எண்ணிப் பார்க்கையில் மனதில் உண்டாகும் அதிர்வுகள் என்னை ஆச்சர்யப்பட வைக்கின்றன.  நாடோடியாக அலைந்து திரிய வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்த எனக்குள், கடலோடியாக அலையும் கனவு எழத் தொடங்கி விட்டது.  மனிதனே எல்லா விலங்குகளையும் விட தொலைதூர ஓட்டத்தில் சிறந்தவன் என்று என் நண்பர் ஒருமுறை சொன்னார்.  மான்களை வேட்டையாட அவற்றை விடாமல் துரத்துவதே போதுமாம்.  ஓடிக் களைத்த மானை மிக எளிதாகக் கொல்லலாம்.  ஆனால் நம்பிக்கையும் பொறுமையும் அவசியம் -- விடாமல் மானின் பின்னே சென்று கொண்டே இருக்க வேண்டும்.  அது போலத்தான் கடல் கடப்பதும்.  எத்தனை பெரிய நீர்நிலை கடல்!  அதை கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வொரு நாளும் கடந்து கண்டங்களையே கடப்பதில்லையா நாம்!  என்னுடைய மோட்டார் சைக்கிள் பயணத்தில் என் அனுபவமும் சிறிய அளவில் இதையே ஒத்திருந்தது.

திரை கடலோடி திரவியம் தேடு என்பார்கள்.  கடலோடி நான் திரவியம் தேடுகிறோனோ இல்லையோ, என்னை நானே தேடப் போகிறேன்.  எப்போதென்று தான் இன்னும் தெரியவில்லை.

கருத்துகள்

  1. உங்களை நீங்களே எப்படி தேட முடியும், எப்படி தான் தேட போறீங்க......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழமொழி சொன்னா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது. :P

      நீக்கு
  2. ஓஹோ நீங்க அப்போ சொன்னதுக்கு பேரு பழமொழியா நான் கூட நீங்க அதை தான் செய்ய போறீங்களோன்னு நினைச்சு கேட்டேன்.....

    ஆனா இப்படி பொசுக்குன்னு பழமொழின்னு சொல்லி எஸ்கேப் ஆவீங்கன்னு நினைக்கவில்லை .......

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’