கொள்கை

சுவர்களைக் காட்டிலும்
கதவுகள் பயனுள்ளவை.
ஆயினும் சந்தர்ப்பவாதம்
தப்பென்றே சாதிப்போம்.
நம் கொள்கை அப்படி.

சுவரில் சிறுநீர் கழிக்கலாம்.
காதலி பெயரைக் கிறுக்கலாம்.
போஸ்டர் ஒட்டலாம்.
ஸ்டம்ப் வரைந்து
கிரிக்கெட் விளையாடலாம்.
சிகரெட் அணைக்கலாம்.

கதவிற்குக் காவலாள் போட வேண்டும்.
முடியாதெனில் பூட்டேனும் வாங்க வேண்டும்.
வேறு வேறு கதவை வேறு வேறு மாதிரி
பூட்ட வேண்டும் திறக்க வேண்டும்.
எவனும் எட்டிப் பார்க்கிறானா
என்று பார்க்க வேண்டும்.

நாமும் எட்டிப் பார்க்கலாம் தான் - ஆனால்
கொள்கை இடம் கொடுக்குமா தெரியவில்லை.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’