போய் வேலையைப் பாருடா

பல வருடங்களுக்கு முன்பு -- பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம் என்று நினைக்கிறேன்.  சாலமன் பாப்பையா ஒரு பட்டிமன்றத்தில் பேசும்போது, வேறு என்னவோ சொல்லிக் கொண்டிருக்கும் போது இடையில் வேடிக்கையாகச் சொன்ன வாசகம் இது: "டேய்... போடா, போய் வேலையைப் பாருடா!"  அவர் சொன்ன விதம் பிடித்திருந்ததால் என் மனதில் அப்படியே நின்று விட்டது.  சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நானும் அதை மற்றவரிடம் கேலியாகச் சொல்லிக் கொண்டேன்.  இது நிற்க.

மனித வாழ்க்கை என்று அமைந்து விட்டாலே கஷ்டங்களும் வேதனைகளும் சாதாரணம் தான்.  பல நேரங்களில் ஏதேனும் கவலையை நினைத்து வேலையில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்திருக்கிறேன்.  அப்படி வேலையில் கவனம் குறைவதால் சில வேலைகள் முடிக்கப்படாமல் பாதியிலேயே நின்று விடும்.  அல்லது கொஞ்சம் குறைவான தரத்தில் அதை செய்திருப்பேன்.  இப்படித் தான் பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது.

இப்போது கொஞ்ச நாள்களாகவே சொந்த வாழ்க்கை எப்படிப் போனாலும் அதைப்பற்றி ரொம்பவும் கவலைப் படாமல் ஒழுங்காக வேலை செய்து வருகிறேன்.  இரவில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரும்போது அந்த நாளில் செய்த வேலை, அதன் தொடர்ச்சியாக வரும் நாள்களில் என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே வீடு திரும்புகிறேன்.  ஒரு விதமான மனநிறைவுடன் வீட்டுக்கு வருகிறேன் இப்போதெல்லாம்.

சாலமன் பாப்பையா அன்று சொன்னது வெறும் வேடிக்கைக்காக மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் தான்.  நீங்களும் போய் வேலையைப் பாருங்க! :)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’