திங்கள், 15 மார்ச், 2010

இன்று முதல்

பதினோரு மணிக்கு முகூர்த்தம்.
பத்தரைக்கு மண்டபத்தில் இருந்தேன்.
அளவுக்கு மீறிய அலங்காரத்தில்
உன்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை.
இருட்டில் 3:32 என மணி சொல்லும்
பச்சை நிற ஒளியை வெறித்தவாறு
மீண்டும் அதே கேள்வியை நினைக்கிறேன்.
உனக்கும் எனக்கும் இடையில் என்ன உறவு இனி?