இன்னமும் காணாமல் போகாதவர் பற்றிய அறிவிப்பு

ஐந்தடி நான்கு அங்குலம்
நல்ல சிவப்பு
மெலிந்த தேகம்
அசட்டுத் தனமாய் சிரிக்கும்
ஒரு புகைப்படம்
கீழே முகவரியும்
தொலைபேசி எண்ணும்.

"மணமகன் தேவை"க்கும்
"காணவில்லை"க்கும்
சிறிதளவு ஒற்றுமை
வார்த்தையளவில் உண்டு.

"போட்டோ பாத்தியா,
பிடிச்சிருக்கா உனக்கு?"
கேட்கும்போதுதான் தோன்றும்,
"காணவில்லை"
எவ்வளவோ
தேவலையோ என்று.

கருத்துகள்

 1. கலக்கறீங்க நண்பா !
  உண்மையாகவே இன்றைய நிலை இவ்வாறுதான் உள்ளது !
  உண்மையான மனிதனுக்கும், உணர்வுகளுக்கும் உலகத்தில் மதிப்பே இல்லை !
  எல்லோரும் இயந்தரத்தனமாக எங்கோ போய் கொண்டிருக்கிறோம் !

  பதிலளிநீக்கு
 2. காதல் தோல்வி.......
  எப்படி துணிகிறார்கள் பெண்கள்?????
  வேரு ஒருவனுடன் தன் உடலை பங்கிட்டு கொண்டு வாழ....???

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

மருத்துவம்