பேச்சுப்போட்டி

சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது சில பேச்சுப் போட்டிகளில் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.  "பேச்சுப்போட்டின்னா என்ன?" என்று நான் கேட்டதற்கு, "ஒரு தலைப்பு கொடுப்பாங்க, அதைப் பத்தி மேடையில பேசணும்" என்று மட்டும் சொன்னார்கள்.

போட்டியில் பங்குகொள்ள முதலில் பெயர் கொடுத்த பின்புதான் அதை எனக்குச் சொல்லிக்கொடுத்தார்கள்.  இரண்டிலிருந்து மூன்று பக்கம் வரை இருக்கும் நீளமான கட்டுரையை மனப்பாடம் செய்து மேடையில் ஒப்புவிக்க வேண்டும்.  அப்படித்தான் எனக்குப் புரிந்தது அப்போது.  பேச்சுப்போட்டிகளில் வரிசையாகப் பங்குகொண்டு, மீண்டும் மீண்டும் தோற்கும்போது கூட எனக்குத் தெரியவில்லை, ஒப்புவிப்பது அல்ல போட்டி என்று.

இதெல்லாம் முடிந்து வருடங்கள் ஆன பிறகுதான் தெரிய வந்தது பேச்சுப்போட்டி என்பது சொற்பொழிவுப் போட்டி என்று.  யாரேனும் ஒருத்தர் என்னுடைய சின்ன வயதிலேயே என்னிடம் சொல்லியிருக்கலாம் -- இளம்பிறை மணிமாறன் மாதிரிப் பேசுவதுதான் போட்டியே அன்றி மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது அல்ல என்று.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்